மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

மீன் வலை இறக்குமதியில் கட்டுப்பாடு!

மீன் வலை இறக்குமதியில் கட்டுப்பாடு!

சீனா, வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து குறைந்த விலையில் அதிகளவு மீன் வலைகள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த அவற்றுக்கு இறக்குமதிக் குவிப்பு வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மீன் பிடித்தலுக்குத் தேவையான வலைகள் உள்நாட்டிலேயே போதுமான அளவில் தரமானதாகத் தயாரிக்கப்பட்டாலும், சீனா உள்ளிட்ட நாடுகளில் குறைந்த விலைக்கு மீன் வலைகள் விற்பனை செய்யப்படுவதால் அவற்றை இந்தியாவில் அதிகளவில் இறக்குமதி செய்து குவிக்கின்றனர். இதனால் உள்நாட்டைச் சேர்ந்த மீன் வலை உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதைக் கருத்தில்கொண்டு வர்த்தக அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆணையம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் வருவாய் துறை, வங்க தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் வலைக்கு இறக்குமதிக்குக் குவிப்பு வரியாகக் கிலோவுக்கு 2.69 டாலரை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் வலைகளுக்கு உற்பத்தியாளர்களைப் பொறுத்து, கிலோ ஒன்றுக்கு 1.51 டாலர் முதல் 2.19 டாலர் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனா, வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மீன் வலைகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் பாதிக்கப்பட்ட இந்திய மீன் வலை உற்பத்தியாளர்கள் சங்கம் (IFMA) முறையிட்டதின் பேரிலேயே தற்போது அவற்றுக்கு இறக்குமதிக் குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon