மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

பி.எஃப் தொகை செலுத்துவதில் மோசடி!

பி.எஃப் தொகை செலுத்துவதில் மோசடி!

ஊழியர்களுக்கான சேமலாப நிதியை (பி.எஃப்) முறையாகச் செலுத்தாத 433 நிறுவனங்களின் நிதிக் கணக்குகளை ஆய்வு செய்ய வருங்கால வைப்பு நிதிய அமைப்பு (ஈ.பி.எஃப்) உத்தரவிட்டுள்ளது.

சென்ற பிப்ரவரி மாதத்துக்கான பி.எஃப் தொகையைச் செலுத்தாமல் இருந்த நிறுவனங்கள் மீது ஈ.பி.எஃப் அமைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பி.எஃப் தொகைக்கான தாக்கல் விதிமுறைகளில் 600 புள்ளிகளை அடிப்படையாகக்கொண்ட கணக்கீட்டில் சுமார் 675 நிறுவனங்கள் 300க்கும் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளன. அதிலும் இந்த 675 நிறுவனங்களில் பிப்ரவரி மாதத்துக்கான பி.எஃப் தொகையை 433 நிறுவனங்கள் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் நிதிக் கணக்கு விவரங்களைச் சோதனையிடும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஈ.பி.எஃப் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை பி.எஃப் ஆணையர் வி.பி.ஜாய் வெளியிட்டுள்ளார்.

மேற்கண்ட 433 நிறுவனங்களும் பி.எஃப் தொகை செலுத்தும் விவரங்களை வெளியிடுவதில் விலக்களிக்கும் சலுகை பெற்ற நிறுவனங்களின் பட்டியலைச் சேர்ந்தவையாகும். பி.எஃப் தொகை செலுத்துவதில் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டால் அந்நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை நீக்கப்படும். பின்னர் அந்நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்குள் தனது ஊழியர்களுக்கான பி.எஃப் தொகை குறித்த விவரங்களை ஈ.பி.எஃப் அமைப்பிடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon