மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

தாய்ப்பால் கொடுக்கும் கல்வியறிவு!

தாய்ப்பால் கொடுக்கும் கல்வியறிவு!

தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வையும் ஆதரவையும் தாய்மார்களிடத்தில் ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு பத்து வழிகாட்டுதலை நேற்று (ஏப்ரல் 13) வெளியிட்டுள்ளது.

குழந்தை பிறந்தது முதல் இரண்டு ஆண்டு வரை தாய்ப்பால் கொடுத்தால், ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குக் கீழுள்ள 8,20,000 குழந்தைகளைப் பாதுகாக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் பத்து வழிகாட்டுதல்களை யுனிசெப் நிர்வாக இயக்குநர் ஹென்ரிட்டா எச் போரே வெளியிட்டார். அதில், குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் ஊட்டுவது நோய் தொற்றுகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும்.

பகுதியாகத் தாய்ப்பால் கொடுப்பது அல்லது தாய்ப்பாலே கொடுக்காமல் இருக்கும்போதுதான் வயிற்றுப்போக்கு மற்றும் பிற நோய் தொற்றுகளால் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதற்குத் தாய்மார்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக இருக்கிறது. விழிப்புணர்வு ஏற்படும்போது, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். தாய்ப்பால் மூலமாகக் குழந்தைகள் நல்ல அறிவுத்திறன் பெறுகின்றனர்.

பள்ளிக்குத் தவறாமல் செல்வது, நன்றாகப் படிப்பது ஆகியவற்றுடன் தாய்ப்பால் தொடர்பு உள்ளது. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல், தாய்மார்களுக்கும் நன்மை உண்டு. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்குப் புற்றுநோய் அபாயம் குறைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon