மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 22 செப் 2019

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

சித்திரை முதல் நாளை கொண்டாடும் மக்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு திருநாள் வாழ்த்துகள்.

தமிழனுக்குச் சித்திரை மாதம் 1 தான் தமிழ்ப் புத்தாண்டு. சிலர் தை மாதம் 1 தான் தமிழ்ப் புத்தாண்டு என்கிறார்கள்.

சரி... நாமளும் பொத்தாம்பொதுவா சொல்லிட்டுப் போவோம். சித்திரை திருநாள் தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை தின நல்வாழ்த்துகள்.

அதுக்கடுத்ததா, தை மாசத்தையும் சித்திரை மாசத்தையும் மிக்ஸ் பண்ணி ஒருவித கவலையா சில மெசேஜ் லாம் வந்துச்சு.. பார்ப்போமா..

இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள்

சித்திரை 1

ஆடி 1

ஐப்பசி 1

தை 1

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.

என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....

ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)

மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)

இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சித்திரை (equinox) - புத்தாண்டு.

ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு.

ஐப்பசி (equinox)- தீபாவளி.

தை (winter solstice) - பொங்கல்.

இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்..அப்படின்னு ஆரம்பிச்ச மெசேஜ் எட்டு பக்கத்துக்கு நீண்டுகிட்டு இருக்கு.. அடேய் போதும்டா…இதுல அக்னி நட்சத்திரம் ஒரு பக்கம், அட்சய திரிதியை ஒரு பக்கம்.

இருங்கடா இன்னும் தமிழ் புத்தாண்டா சித்திரை திருநாளான்னு அதுவே கன்ஃபார்ம் ஆகல.

அடுத்ததா இந்தப்பக்கம், வடிவேலு.. ‘ராசிபலன் பார்க்காம கைகால்லாம் உதறுது வடிவேலு’ன்னு என்னையே பதட்டப்பட வச்சிட்டாரு ஒருத்தரு.

போன வருச ராசிபலன்களை எடுத்து பாருங்க. அது எந்த அளவுக்கு சரியாருக்கு அப்படின்னு பாருங்க. அதுக்குள்ள அடுத்த வருசம் வந்துரும் இல்லன்னா, புடிக்காம பாக்கவே மாட்டீங்க.

நானே நேரம் போகாம, தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் பதிலுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் சொல்லியும், சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் சொன்னவங்க கிட்ட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் சொல்லி வம்பிழுத்துட்டு இருக்கேன்… நீங்க என்னடான்னா..

ஹலோ, சார்… என்ன நீங்க வாழ்த்து சொல்ல வரேன்னீங்க.. வர்ர்ர்ரவே இல்ல..

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon