மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

மேய்ப்பர்களின் வாழ்க்கையைப் பேசும் தொரட்டி!

மேய்ப்பர்களின் வாழ்க்கையைப் பேசும் தொரட்டி!

மக்களின் வாழ்க்கை முறைகளை யதார்த்தத்துடன் பதிவு செய்யும்போது ஒரு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறும். அதைக் கவனத்தில்கொண்டே ‘தொரட்டி’ படத்தை இயக்கிவருகிறார் மாரிமுத்து.

கால்நடைகள் மேய்க்கும் சமூகத்தை பின்னணியாகக்கொண்டு அவர்களது வாழ்க்கை முறை, கலாசாரம், வலிகளைப் பதிவுசெய்யும் படமாக தொரட்டி உருவாகியுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு 1980களின் காலப்பின்னணியில் தயாராகியுள்ள இந்தப் படம் குறித்து இயக்குநர் மாரிமுத்து, “இது ஆவணப்படம் அல்ல. முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிவருகிறது. தொரட்டி என்பது நீண்ட குச்சியில் ஒரு கொக்கி மாட்டப்பட்டிருக்கும். உயரமான மரங்களில் இருந்து இலை, காய்களைப் பறிக்க பயன்படுத்தப்படுகிறது. இதை இம்மக்கள் சமயத்தில் ஆயுதமாகவும் உபயோகின்றனர். தொரட்டிக்கு பின் சில மூடநம்பிக்கைகளும் நம்ப முடியாத சடங்குகளும் உள்ளன” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஷமான் மித்ரு, மாயன் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக அறிமுகமாவதோடு தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளார். சத்யகலா செம்பொண்ணு என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon