மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஏப் 2018

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் புலால் உண்ணாமை என்னும் மாயை!

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் புலால் உண்ணாமை என்னும் மாயை!

பாலமுரளி நடராஜன், சூரஜ் ஜேக்கப்

(இந்தியாவில் நிலவும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி நடைபெற்ற ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை இந்திய உணவுப் பழக்கங்கள் குறித்த கருத்துகளைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை நிறுவுகிறது. புலால் உண்ணாமை, மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் ஆகியவை குறித்த பல உண்மைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. உணவுப் பழக்கவழக்கங்கள் இடம், குழுக்கள், வர்க்கம் பாலினம் எனப் பல்வேறு காரணிகளால் பல வகைகளில் மாறுபடுகின்றன என்பது காட்டப்படுகிறது. இந்திய உணவுப் பழக்கங்களைக் கறாராக வகைப்படுத்த முடியாது என்பதை இக்கட்டுரை உரிய தரவுகளோடும் தர்க்க ரீதியான வாதங்களோடும் நிறுவுகிறது. Economic and Political Weekly இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்தின் நிறைவுப் பகுதி இன்று வெளியாகிறது – ஆசிரியர்)

இந்த ஆய்விலிருந்து நாங்கள் கண்டடைந்த முடிவுகள்:

இந்தியாவைப் புலால் உண்ணாத நாடாகச் சித்திரிப்பது யதார்த்தத்தை முற்றிலும் தவறாகப் பிரதிபலிப்பதாகும் என்பதை மேற்கண்ட ஆராய்ச்சி தெளிவுபடுத்துகிறது. இந்தியாவில் புலால் உண்ணாதவர்கள் மக்கள்தொகை அதிகபட்சம் பார்த்தால் 31%, யதார்த்தமாகப் பார்த்தால் 20%. பெரும்பாலான இந்தியர்கள் தொடர்ச்சியாகவோ அல்லது அவ்வப்போதோ ஏதோ ஒருவகை இறைச்சியை உட்கொள்கின்றனர். இன்னும் அதிகம் பேர் இறைச்சியை உட்கொள்வதை நோக்கி வரக்கூடும்.

ஒரு பிரிவினரின் அல்லது தேசத்தின் பாரம்பரியம் என்று கோரப்படுவது அதிகாரம் அல்லது மேலாண்மைக்கான போராட்டங்கள் ஆகியவற்றோடு தொடர்புடையவை. ஆரம்பத்தில் எங்களது முயற்சி ‘புலால் உண்ணாமையை உள்ளூர் ரீதியாகக் காட்டுவதாகும்’. யதார்த்தத்தில் எந்த அளவுக்கு நிலவுகிறதோ அதைவிட அதிகமாக இந்தியாவையும் இந்தியர்களையும் பற்றிய சித்திரிப்புகள் மீது புலால் உண்ணாமை மிகையான செல்வாக்கு செலுத்தியுள்ளது.

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சான்றுகள் மாட்டிறைச்சி உட்கொள்வது கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்களுடைய (குறைந்தபட்சம் 15% அல்லது சுமார் 18 கோடி பேர்) கலாசார நடைமுறையாக உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகின்றன. நாட்டில் மாட்டிறைச்சி உட்கொள்பவர்களின் சரியான எண்ணிக்கையை மதிப்பீடு செய்வதைக் குறைத்து மதிப்பிடுவதற்காக எண்ணிக்கையைத் திரிக்கக்கூடிய கலாசார அரசியல் மற்றும் ஆழ்ந்த அச்சங்கள் ஆகிய காரணிகளையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும்.

மாநிலம், சமூகப் பிரிவு, பாலினம், வர்க்கம் மற்றும் சமூகப் பிரிவுகளுக்குள்ளேயே நிலவும் வேறுபாடுகளின்பால் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியாவின் உணவுப் பழக்கங்களைப் பற்றிய பல சித்திரங்களை நாங்கள் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறோம். இந்த வேறுபாடுகளின்பால் கவனம் செலுத்துவது இவ்வேறுபாடுகளின் பின்னணியை விளக்குவதற்காக வாய்ப்புகளையும் மக்களுடைய உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற சமுக நிகழ்வுகளைத் தக்கவைக்கின்ற சமூகப் போக்குகளையும் இயக்கப் போக்குகளையும் பற்றி ஆரம்பநிலை ஆராய்ச்சியை மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அனுமதியளிக்கிறது.

மக்களைப் பற்றிப் பொதுமைப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் விஷயத்தில் பலன்தரும் வகையில் ஈடுபட இது நமக்கு அனுமதியளிக்கிறது. இது கலாசாரத்தை முன்பிலிருந்தே கொடுக்கப்பட்ட விஷயமாக அல்லாமல் தொடர்ச்சியாக உருவாகிவரும் விஷயமாகப் பார்க்கும்படி கோருகிறது. கலாசார நடைமுறைகள் குறித்துப் பொதுவில் கோரப்படுபவைகள் குறித்து விமர்சனபூர்வமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. சமூகப் பிரிவுகளை இயல்பாகவே திரண்டுள்ள பிரிவுகளாக அல்லாமல் கட்டுருவாக்கப்பட்டுள்ள பிரிவுகளாகப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் இது கோருகிறது.

உணவு பற்றிக் கற்றுக்கொள்வதற்கும் அர்த்தங்களைப் பரிமாறுவதற்குமான கலாசார வெளிகளில் உணவுப் பழக்கங்கள் உண்மையில் அமையப்பெறும் பட்சத்தில், அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களிலும் ஒருவருக்கொருவர் பழகுவதில் சமூகப் பிரிவு அடையாளங்களுக்கான குறியீடுகளாக உணவுப் பழக்க வழக்கங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் காண வேண்டும்.

சமூக ரீதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ள பிரிவுகளில் கலாசார ரீதியாக ஒரே சீரான தன்மையை அனுமானம் செய்யக் கூடாதென்பதன் தேவையை இந்தப் புள்ளிவிவரங்களுள் பெரும்பாலானவை காட்டுகின்றன. ஒரு சமூகப் பிரிவுக்குள்ளேயே இருக்கும் வேறுபாடுகள் குறித்து ஆராய்ச்சி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அத்தகைய வேறுபாடுகளைப் புறக்கணிப்பது, சமூகப் பிரிவு அடையாளங்களை அணி திரட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக நடப்பில் எது ஃபேஷனாக உள்ளதோ அதன்படி கோருவதையெல்லாம் தமது ஆராய்ச்சியில் தேவையின்றி மீண்டும் அறிமுகப்படுத்தும் நிலைக்கு இட்டுச்செல்கிறது.

சமூக வகையினங்களை உண்மையில் நிலவும் சமூகப் பிரிவுகளோடும் அவற்றின் நடைமுறைகளோடும் பொருத்தித் தவறாகப் பார்ப்பது, அதே பிரிவுகளை இறுகச்செய்யும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது. இந்த அர்த்தத்தில், இந்தியாவை சமூகப் பிரிவுகளின் ஒரு கலவையாகப் பார்ப்பதற்குப் பதிலாக விவசாயச் சூழலியல் மண்டலங்களாகவும் கலாசார - அரசியல் மண்டலங்களாகவும் பார்ப்பது உகந்தது.

“எது உணவு?”, “யார் எதைச் சாப்பிடலாம் என யார் தீர்மானிப்பது?” ஆகிய கேள்விகள் அதிகாரம், விருப்பம், அடையாளம் மற்றும் முன்னுரிமை கொடுத்தல் ஆகிய பதிவேடுகளில் நிர்ணயிக்கப்படுகின்றன.

*

இக்கட்டுரைக்கு ஆதாரமான நூல்கள், கட்டுரைகள்

அன்வேஷி (2012): "மெனு என்ன? உணவு அரசியலும் மேலாண்மையும்", Broadsheet on Contemporary Politics, Vol 1, No 4, pp 2–3.

பேனர்ஜீ, S (2012): Masculinity, Hinduism, and Nationalism in India, (என்னை ஒரு மனிதனாக்குங்கள்: இந்தியாவில் ஆண்மையும், இந்துயிசமும் தேசியவாதமும்),SUNY Press.

சக்கரபர்த்தி, D (2000): Provincializing Europe: Postcolonial Thought and Historical Difference (ஐரோப்பாவை உள்ளூர்வாரியானதாக்குதல்: பின்காலனிய சிந்தனையும் வரலாற்று வேற்றுமையும்), Princeton University Press.

சக்கரவர்த்தி A K (1974): “Regional Preference for Food: Some Aspects of Food Habit Patterns in India,” பிராந்தியரீதியான முதன்மை: இந்திய உணவுப் பழக்க வழக்க பாணிகளில் சில அம்சங்கள்), Canadian Geographer, Vol 18, No 4, pp 395–410.

டாங் H A and P F லாஞ்ஜோ (2015): “Poverty Dynamics in India between 2004 and 2012: Insights from Longitudinal Analysis Using Synthetic Panel Data,” (2004 க்கும் 2012 க்குமிடையே இந்தியாவில் ஏழ்மை டைனமிக்ஸ். சிந்தடிக் பேனல் புள்ளிவிவரங்களைக்கொண்டு நீடித்த கால அளவில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு), World Bank Policy Research Working Paper, (7270).

தத் G, M ரவல்லியன் and R முர்கை (2016): “Growth, Urbanization and Poverty Reduction in India,” (இந்தியாவில் வளர்ச்சி, நகரமயமாதல், மற்றும் ஏழ்மைக்கு குறைப்பு), No 21983, National Bureau of Economic Research.

டீடன் A, and V கோஜெல் (2005): “Data and Dogma: The Great Indian Poverty Debate,” (புள்ளிவிவரங்களும் வறட்டு சூத்திரங்களும்--மாபெரும் இந்திய வறுமை விவாதம்), World Bank Research Observer, Vol 20, No 2, pp 177–99.

தேசாய் S B, A தூபே B L ஜோஷி M சென் A ஷெரீப் and R வன்னெமன் (2010): Human Development in India (இந்தியாவில் மனித வளர்ச்சி), New Delhi: Oxford University Press.

டிரீஸ் J and R கெஹெரா (2015): “Understanding Leakages in the Public Distribution System,” (பொது விநியோக முறையில் கசிவுகளைப் புரிந்துகொள்ளுதல்), Economic & Political Weekly, Vol 50, No 7, pp 39–42.

கசேம்-பஃச்சாண்டி P (2009): “The Hyperbolic Vegetarian: Notes on a Fragile Subject in Gujarat,” (ஆரவாரமிக்க வெஜிடேரியன்: குஜராத்தில் இலகுவான பிறவியொன்றைப் பற்றிய குறிப்புகள்),

Being There: Fieldwork Experience and the Making of Truth, John Borneman and Abdellah Hammoudi (eds), Berkeley: University of California Press, pp 77–112.

GoI (2012): 19th Livestock Census – 2012, இந்திய அரசு (2012), 19ஆவது கால்நடைக் கணக்கெடுப்பு, Department of Animal Husbandry, Dairying and Fisheries, Ministry of Agriculture, Government of India.

IIPS and Macro International (2007): National Family Health Survey (NFHS–3), தேசிய குடும்ப சுகாதார சர்வே 2005ஃ-06: India, International Institute for Population Sciences, Mumbai.

ஜெபஃர்லோ Jaffrelot, C (2003): India’s Silent Revolution: The Rise of the Lower Castes in North India, (இந்தியாவின் மௌனப் புரட்சி: வட இந்தியாவில் கீழ் சாதிகளின் எழுச்சி), Delhi: Permanent Black.

ஜோஷி P C, K K பாங்வால் B S பட்வால் B சக்லானி and B சகியானி (1994): “In Pursuit of Protein: On Meat Eating in Garhwal,” (புரதச் சத்தைப் பின்தொடர்ந்து: கர்வாலில் இறைச்சி உண்பது பற்றி), Vol 24, No 2, Indian Anthropologist, pp 39–44.

காரே /Khare, R S (1966): “A Case of Anomalous Values in Indian Civilization: Meat-eating among the Kanya–Kubja Brahmans of Katyayan Gotra,” (இந்திய நாகரிகத்தில் முரண்பட்ட விழுமியங்கள்: கடாயாயன் கோத்திரத்தைச் சேர்ந்த கன்யா-குப்ஜா பார்ப்பனர்கள் மத்தியில் புலாலுண்ணுதல்), Journal of Asian Studies, Vol 25, No 2, pp 229–40.

மிஷெலூட்டி / Michelutti, L (2008): The Vernacularisation of

Democracy: Politics, Caste and Religion in India, (ஜனநாயகம் உள்ளூர் மொழிமயமாதல்: இந்தியாவில் அரசியலும் சாதியம் மதமும்), New Delhi: Routledge India.

NDTV (2015): “‘Never Said Muslims Must Go to Pakistan,’ Clarifies Haryana Chief Minister Manohar Lal Khattar,” "முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டுமென ஒருபோதும் கூறவில்லை', தெளிவுபடுத்துகிறார் அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் ), 6 October, viewed on 24 December 2016, http://www.ndtv.com/india-news/muslims-can-stay-but-must-give-upbeef-says-haryana-chief-minister-ml-khattar-1232818.

NSSO (2013): “Note on Sample Design and Estimation Procedure of NSS 68th Round,” (மாதிரி வடிவமைப்பு மற்றும் என்.எஸ். எஸ். 68ஆவது சுற்று வழிமுறை), National Sample Survey Office, Ministry of Statistics and Programme Implementation, New Delhi.

Planning Commission (2011): India Human Development Report 2011: Towards Social Inclusion (இந்திய மனித வளர்ச்சி அறிக்கை (2011): சமூக ரீதியில் உள்ளடக்குவதை நோக்கி), New Delhi: Institute of Applied Manpower Research, Planning Commission, Government of India.

ராப்பின்ஸ் / Robbins, P (1999): “Meat Matters: Cultural Politics along the Commodity Chain in India,” ("இறைச்சிக்கு முக்கியத்துவமுள்ளது: இந்தியாவில் பண்ட சங்கிலித் தொடர் நெடுகே கலாச்சார அரசியல்), Cultural Geographies, Vol 6, No 4, pp 399–423.

ஷா / Shah, G (2004): Social Movements in India: A Review of Literature, (இந்தியாவில் சமூக இயக்கங்கள்: சம்பத்தப்பட்ட இலக்கிய விமர்சனம்), Sage Publications India.

Shaik Zahid Mukhtar v State of Maharashtra & Ors (2016): viewed on 24 December 2016, https://indian Kanoon.org/doc/153513175/.

KS சிங் / Singh, K S (1993): People of India, Anthropological Survey of India. (இந்தியாவின் மக்கள், இந்திய மானுடவியல் சர்வே)

சுந்தரம் / Sundaram, K and S D டெண்டுல்கர் / Tendulkar (2003): “NAS–NSS Estimates of Private Consumption for Poverty Estimation: A Further Comparative Examination,” (வறுமையை மதிப்பிடத் தனியார் நுகர்வுக்கான NAS-NSS மதிப்பீடுகள்), Economic & Political Weekly, Vol 38, No 4, pp 376–84.

வைத்தியநாதன் / Vaidyanathan, A and K N நாயர் / Nair (1980): “On the Sacred-crow Controversy,” (புனிதப் பசு சர்ச்சை), Current Anthropology, Vol 21, No 3, pp 380–84.

யாதவ் / Yadav, Y and S குமார் / Kumar (2006): “The Food Habits of a Nation,” (ஒரு தேசத்தின் உணவுப் பழக்கவழக்கங்கள்), Hindu, 14 August, viewed on 26 December 2016, http://www.thehindu.com/todays-paper/the-food-habits-of-a-nation/article3089973.ece.

நன்றி: http://www.epw.in/journal/2018/9/special-articles/provincialising-vegetarianism.html

தமிழில்: பா.சிவராமன்

பாகம் 1-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 2-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 3-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 4-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 5-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 6-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 7-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 8-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 9-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

சனி 14 ஏப் 2018