மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ஹெல்த் ஹேமா: புரதமும் கொழுப்பும் வேண்டுமா?

ஹெல்த் ஹேமா: புரதமும் கொழுப்பும் வேண்டுமா?

புரோட்டீன் எனும் கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தைக்கு அர்த்தம் ‘முக்கியத்துவத்தில் முதன்மை’ உடல் வளர்ச்சிக்குப் புரதம் அத்தியாவசியமான தேவை. புரதச்சத்து குறைந்தால், நம் உடல் அதன் தசைகளையே உண்ண ஆரம்பித்துவிடும். புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை. ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும் 0.8 கிராம் புரதம் தேவை. இவை தவிர உடலுக்குத் தாதுப்பொருள்கள், வைட்டமின்களும் தேவைப்படுகின்றன. முக்கியமாக நார்ச்சத்து ஜீரணமண்டலச் செயல்களுக்கு உதவுகிறது. ஒருவர் நாளொன்றுக்குத் தங்கள் உணவில் சராசரியாக 50 முதல் 65 கிராம் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேசிய சுகாதார நிறுவனம் (National Institute of Health) பரிந்துரைக்கிறது. ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும் ஒவ்வொரு கிராம் புரதம் தேவை. அதாவது, உங்கள் உடல் எடை 50 கிலோ என்றால், தினமும் 50 கிராம் புரதம் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவர் வேலை பார்க்கும் தன்மை, தேவையின் அடிப்படையில் இந்த அளவு நபருக்கு நபர் வேறுபடும். எனவே, உணவியல் நிபுணர்களின் ஆலோசனையின்படி எடுத்துக்கொள்வது சிறந்தது.

லிபிட் (கொழுப்பு)

கொழுப்புகள் ஒரு முனைப்படுத்தப்பட்ட சக்தி. அதாவது குறைந்த அளவே நிறைந்த சக்தியைக் கொடுக்கும். இயற்கை கொழுப்பு பொருள்களில் அதிகம் இருப்பது (98.99%) டிரைகிளைசிரைட்ஸ் (Triglycerides) எல்லா கொழுப்புகளும் எண்ணெய்களும் மூன்று வகை கொழுப்பு அமிலங்கள் உள்ளவை. பூரித கொழுப்பு, ஒற்றை பூரிதமில்லா கொழுப்பு மற்றும் பல பூரிதமில்லா கொழுப்பு. பூரித கொழுப்பு (Saturated) நிறைந்த பொருள்களை அதிகம் உண்டால் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்கும். ஒற்றை பூரிதமில்லா கொழுப்புகள் (Mono unsaturated) கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்கின்றன. பல பூரிதமில்லா கொழுப்பு கொலஸ்ட்ராலை (Poly unsaturated) அதிகரிப்பதில்லை.

கொழுப்பு வகை

1. தேங்காய் எண்ணெய்

2. ஆலிவ் எண்ணெய்

3. பாமாயில்

4. கடலை எண்ணெய்

5. சான்ஃப்ளவர் எண்ணெய்

6. நல்லெண்ணெய்

மேல் சொன்னவை தவிர, வனஸ்பதி போன்ற ‘ஹைட்ரஜன்’ கலந்தவை அதிக பூரித கொழுப்பு உள்ளவை. வனஸ்பதி தவிர்க்க வேண்டும். நமக்கு தேவையான தினசரி கொழுப்பின் அளவு 25-35 கிராம். இந்த அளவில் பாதியாவது எண்ணெயாக இருந்தால் நலம். ஒரே தடவையாக அதிக கொழுப்பு உண்டால் கொலஸ்ட்ரால் வேகமாக ஏறும். அதே அளவு கொழுப்பைச் சிறிது சிறிதாக பல வேளைகளில் உண்டால் கொலஸ்ட்ரால் ஏறுவதைத் தடுக்கலாம். வளர்சிதை மாற்றத்தின்போது, கொழுப்புகள், அதே அளவுள்ள ஹைடிரேட்டைகளை விட இரண்டு மடங்கு உஷ்ண சக்தியைத் தருகிறது. இந்தச் சக்தி உடல் உஷ்ணமாகவும், தசைகள் இயக்கத்துக்கும் பயனாகிறது.

இதயநோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொழுப்பைத் தவிர்க்க வேண்டும்.

கொலஸ்ட்ரால் ‘ஸ்டெரால்’ (ஸ்டெராய்ட்டு ஆல்கஹால் பிரிவைச் சேர்ந்தது) பிரிவின் உள்ள ஓர் அம்சம். செல்களில் உள்ள அதுவும் மூளை, நரம்பு செல்களில் உள்ள முக்கியப் பொருள். கல்லீரலால் உண்டாக்கப்பட்டு, அங்கேயே சேமித்து வைக்கப்படுகிறது.

ஆரோக்கியமான மனிதனின் உடலில் கொலஸ்ட்ரால் 140-160 மி.மி. இருக்க வேண்டும். 200 மி.மி. கீழே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். 200-240 கவனிக்க வேண்டிய அளவுகள். 240க்கு மேல் இருந்தால் டாக்டரை அணுகவும்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon