மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

சிறப்புக் கட்டுரை: இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

சிறப்புக் கட்டுரை: இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாலமுரளி நடராஜன், சூரஜ் ஜேக்கப்

(இந்தியாவில் நிலவும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி நடைபெற்ற ஆய்வு ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை இந்திய உணவுப் பழக்கங்கள் குறித்த கருத்துகளைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை நிறுவுகிறது. புலால் உண்ணாமை, மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் ஆகியவை குறித்த பல உண்மைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. உணவுப் பழக்கவழக்கங்கள் இடம், குழுக்கள், வர்க்கம் பாலினம் எனப் பல்வேறு காரணிகளால் பல வகைகளில் மாறுபடுகின்றன என்பது காட்டப்படுகிறது. இந்திய உணவுப் பழக்கங்களைக் கறாராக வகைப்படுத்த முடியாது என்பதை இக்கட்டுரை உரிய தரவுகளோடும் தர்க்க ரீதியான வாதங்களோடும் நிறுவுகிறது. Economic and Political Weekly இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்தின் ஒன்பதாம் பகுதி இன்று வெளியாகிறது - ஆசிரியர்)

சித்திரம் 8: மாட்டிறைச்சியும் முஸ்லிம் மக்கள்தொகையும் (NSSO வும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பும்)

முஸ்லிம்கள் மற்றும் SCக்கள் மத்தியில் NSSO ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கும்படி மாட்டிறைச்சி உண்ணுதலில் இத்தகைய பெரும் இடரீதியான வேறுபாடுகள் ஏன் நிலவுகின்றன? கலாசார - அரசியல் நிர்பந்தங்கள் இந்த இடரீதியான வேறுபாடுகளில் குறைந்தது ஒரு பகுதிக்காகவாவது காரணம் எனக்காட்ட ஆதாரங்கள் உள்ளன. முஸ்லிம்கள் விஷயத்தில், மாநிலத்தின் மக்கள்தொகையில் முஸ்லிம்களின் பங்கு எவ்வுளவுக்கெவ்வுளவு அதிகமாக உள்ளதோ, அவ்வுளவுக்கவ்வுளவு அதிகமாக அம்மாநிலத்தின் முஸ்லிம்கள் மத்தியில் மாட்டிறைச்சி உண்ணுதல் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. இது 17 பெரிய மாநிலங்களில் முஸ்லிம்கள் மக்கள்தொகையின் பங்குடன் மாட்டிறைச்சி நிலவுவதைத் தொடர்புபடுத்தி வரையப்பட்டுள்ள சித்திரமும் 95% சம்பவிக்க வாய்ப்புள்ள எல்லைகளை வரையறுத்ததோடுகூடிய இருமடிப் பொறுத்தக் கோடுடனும் உள்ள வரைபடம் 8இல் காட்டப்பட்டிருக்கிறது. 17 ஆய்வுக் கண்டுபிடிப்புகள் மட்டுமே இருந்தாலும் முஸ்லிம் மக்கள்தொகை விகிதத்துக்கும் முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்ணுவதற்குமிடையே தெளிவான கணிசமான பெரும்பாலும் நேர்க்கோடாக உள்ள சாதகமான தொடர்பு இருப்பதைக் கவனியுங்கள். (17 முக்கிய மாநிலங்களில்) முஸ்லிம் மக்கள்தொகையின் பங்கோடு முஸ்லிம்கள் மத்தியில் மாட்டிறைச்சி உண்ணுதல் நிலவுவதை ஒப்பிடும் இரு மாறும் காரணிகளைக்கொண்ட பின்முக நேர் சரிவு (linear regression)க்கான மதிப்பிடப்பட்ட குணகம் 1.74 ஆகும் (வழமையான பிழைவாய்ப்பு 0.30). 100% முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்ட ஓர் அனுமான நிலைக்கு நீடிப்பதன் மூலம் முஸ்லிம்களே இல்லாத ஒரு மாநிலத்தைவிட அம்மாநிலத்தில் 54% மாட்டிறைச்சி உண்ணுதல் நிலவுவது அதிகமாக இருக்கும்.)

மாட்டுக்கறி உண்பதோடு இன்னும் அதிக ஆபத்துகளும் அவப்பெயரும் சம்பந்தப்பட்டிருந்தாலும் மக்கள்தொகை பங்குகளோடு இத்தகைய நேரடி சாதக உறவைக்கொண்டிருப்பது முந்தைய பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள OBC மக்கள்தொகைக்கும் இறைச்சி உண்பதற்குமிடையே நிலவும் சாதக உறவைவிட வலுவாக உள்ளது. "எண்ணிக்கையில் வலுவுள்ளது" என்ற பழமொழி யதார்த்த வாழ்க்கை நிலைமைகளில் சோதிக்கப்படலாம். இவ்வாறாக, அரியானா முதல்வர் மாட்டிறைச்சி உட்கொள்வது பற்றியும் முஸ்லிம்கள் இந்தியாவில் தொடர்ந்து வசிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தனது மோசமான கருத்துகளைக் கூறியபோது "மேவாட் மாவட்ட முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்பதை தாமாகவே முன்வந்து கைவிட்டுவிட்டனர்" என்றும் கூறினார் (NDTV 2015). முதலமைச்சர் ஒருவர் முஸ்லிம்களுக்கு வெளிப்படையாக விடுத்த அச்சுறுத்தலைச் சிறுபான்மை சமூகம் ஒன்றின் "தாமாகவே முன்வந்து செய்த" செயலாகக் காட்டுவதைப் பொதுமக்கள் கவனிக்கத் தவறியிருக்க மாட்டார்கள் என நம்புகிறோம்.

இதேபோல, SCக்கள் விஷயத்தில், சித்திரம் 7இல் கொடுக்கப்பட்டுள்ள இடரீதியிலான வேறுபாட்டையும் SC மக்கள் மீதுள்ள கலாசார - அரசியல் நிர்பந்தங்களில் நிலவும் இடரீதியிலான வேறுபாடுகளைக் கொண்டு விளக்கலாம். மாட்டிறைச்சி உண்ணுதலில் பெரிய மாநிலங்களின் வரிசையில் நான்கு தென்மாநிலங்கள் மேலே இருப்பது பளிச்செனத் தெரிகிறது. தலித் விடுதலை இயக்கங்களுக்கான ஒப்பீட்டளவிலான நீண்டகால வலுவான வரலாற்றைக் கொண்டிருப்பது இம்மாநிலங்கள்தான் (ஜெபர்லா 2003, ஷா 2004). கர்நாடகா நீங்கலாக இந்துத்துவத்தால் தூண்டிவிடப்படுகிற கலாசார - அரசியல் நிர்பந்தங்களின் தாக்கம் SC மக்கள் மத்தியில் மாட்டிறைச்சி உண்பது நிலவுதல் மிகக் குறைவாக உள்ள சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதும் இந்த மாநிலங்களில்தான்.

தென்மாநிலங்களிலேயே ஒப்பீட்டளவில் விதிவிலக்காக இருக்கும் கர்நாடக விஷயம் சுவாரஸ்யமானது. SCக்கள் மாட்டிறைச்சி உட்கொள்வதில் கர்நாடகம் மாநிலங்களுக்கிடையே நான்காவது இடத்திலிருந்தாலும் (7%), இதர மூன்று தென்மாநிலங்களில் ஒரு மடங்காகவோ அல்லது மூன்று மடங்காகவோ இது நிலவுகிறது. ஒன்றிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இது 22%, தமிழ்நாட்டில் 19%, கேரளத்தில் 17%. ஆந்திரப் பிரதேசத்தைவிட கர்நாடகத்தில் இந்துத்துவா இயக்கம் மிகவும் வலுவாக உள்ளது. அங்கு தலித் விடுதலை இயக்கங்கள் குறைந்த வலுவுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, இரு மாநிலங்களிலும் SC மக்கள்தொகையின் பங்கு சமமாக இருந்தாலும் (18%, ஆந்திரப்பிரதேசத்தில் 20%), அவையிரண்டும் வெவ்வேறு அளவில் SC மக்கள் மாட்டிறைச்சியை உட்கொள்ளும் நிலையைக் கொண்டிருப்பது பளிச்செனத் தெரிகிறது.

சித்திரம் 9: மாட்டிறைச்சி உண்ணுதல் பிஜேபியின் வாக்கு விகிதமும் (NSSO மற்றும் தேர்தல் கமிஷன் விவரம்)

சித்திரம் 10: மாட்டிறைச்சி உண்ணுதலும் கறவை மாடு கால்நடைகளும் (NSSO மற்றும் கால்நடைக் கணக்கெடுப்பு)

இந்துத்துவா அரசியலுக்கும் முஸ்லிம்கள் மற்றும் SCக்கள் மத்தியில் மாட்டிறைச்சி உட்கொள்ளப்படுவதற்குமுள்ள சம்பந்தத்தைப் பற்றி மேலும் ஆராய, சித்திரம் 9, கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களில் (2004, 2009, 2014) பெரிய மாநிலங்களில் பிஜேபிக்குக் கிடைத்த வாக்குகளின் சதவிகிதத்தோடு மாட்டிறைச்சி உண்ணுவது தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. இந்தியத் தேர்தல் கமிஷன் விவரங்களைப் பயன்படுத்தியும் 95% நிகழக்கூடிய வாய்ப்புள்ள எல்லைகளை வரையறுப்பதோடுகூடிய பின்முகச் சரிவு நேர்க்கோட்டுடனும் (linear regression line) இது செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று தேர்தல்களில் பிஜேபிக்குக் கிடைத்த சராசரி வாக்கு விகிதம் இந்துத்துவா நிர்பந்தங்களின் பிடிப்புக்கு அரைகுறையான அறிகுறி மட்டுமே என்பதையும் அதிலும் பிஜேபியின் தேர்தல் சாதனையில் இந்துத்துவா காரணிகளின் பங்கில் காலவாரியாக மாற்றங்கள் நிலவுவதால் அங்ஙனம் இருப்பதையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம். இருந்தபோதிலும், சித்திரம் 9 காட்டுவது போல, அதிக பிஜேபி வாக்கு விகிதத்தையுடைய மாநிலங்கள் முஸ்லிம்கள் மற்றும் SCக்கள் மத்தியில் மாட்டுக்கறி உண்ணல் குறைவாக இருக்கத் தலைப்படுகின்றன.

விவரப் புள்ளிகளின் எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும் (17), இந்த உறவு மரபு மட்டங்களில் SCக்களுக்கு (p-மதிப்பு 0.034) புள்ளியியல் ரீதியாக முக்கியமானதாக உள்ளது. முஸ்லிம்கள் விஷயத்தில் (p-மதிப்பு 0.131) இது அப்படியில்லை. அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சேர்த்துக்கொள்ளப்படும்பட்சத்தில் மரபு மட்டங்களில் முஸ்லிம்கள் மத்தியிலும் (p-மதிப்பு 0.006) இது புள்ளியியல்ரீதியாக முக்கியமானதாக மாறுகிறது. மதிப்பிடப்பட்ட குணக அளவுகள் பெரிதாக இருப்பதைக் கவனிக்கவும்.

முஸ்லிம்கள் விஷயத்தில், அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய ரிக்ரெஷனில் (மாறக்கூடிய இரு காரணிகளுக்கிடையிலான உறவில்) மதிப்பிடப்படும் குணகம் (co-efficient) -0.74. இதன் பொருள் என்னவென்றால் 100 சதவிகிதம் முஸ்லிம்களைக் கொண்ட ஒரு கற்பனை மாநிலத்துக்கு இதை விரிவுபடுத்தினால் அம்மாநிலம் முஸ்லிம்களே இல்லாத ஒரு மாநிலத்தை விட 74% புலால் உண்ணாமை அதிகம் நிலவும் வகையில் இருக்கும். முஸ்லிம் மக்கள்தொகைக்கும் மாட்டுக்கறி உண்பதற்கும் உள்ள உறவு குறித்த எண்ணிக்கையோடு தற்செயலாக இது ஒன்றாகப்போவதாகவும் NAS மற்றும் NSSO விவரங்களை ஒப்பிடுகையில் கிடைத்த எண்ணிக்கையான 96%க்கு நெருக்கமாகவும் இருக்கிறது. காரணரீதியான உறவை நிறுவ சித்திரம் 9 போதுமானதல்ல என்பதைக் கவனிக்கவும்.

பிஜேபியின் தேர்தல் சாதனை இறைச்சி உண்பதற்கோ அல்லது இறைச்சியைத் தவிர்ப்பதற்கோ நேரடியாகக் காரணமாகிறது என நாங்கள் வாதிடவில்லை. ஆனால், ‘மூன்றாவது காரணி’யான இந்துத்துவத்தின் கலாசார - அரசியல் பிஜேபியின் சாதனைக்கும் இறைச்சி தவிர்ப்பதற்கும் தனித்தனியே காரணமாகிறது என நாங்கள் ஊகிக்கிறோம்.

மாட்டிறைச்சி எந்த அளவுக்குக் கிடைக்கிறது?

இறுதியாக, NSSO மாட்டுக்கறி உண்ணல் மதிப்பீடுகளிலுள்ள இடவாரியான வேறுபாடுகளுக்கு ஒரு மாற்று விளக்கமாக விளங்கக்கூடிய விஷயத்தை, அதாவது மாட்டிறைச்சி கிடைத்தல் என்ற விஷயத்தை எடுத்துக்கொள்கிறோம். மாட்டிறைச்சி மாற்றீடு அளவுகோலாக 2012 கால்நடைகள் கணக்கெடுப்பிலிருந்து கறவை மாடுகள் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டு முஸ்லிம்கள் மற்றும் SCக்கள் தலையொருவருக்கு எத்தனை கறவை மாடுகளுள்ளன என்பதை ஒப்பிட்டுப்பார்க்கிறோம். சித்திரம் 10, இந்த எண்ணிக்கைகளுக்கு எதிராக NSSO வில் தெரியப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி உண்ணல் விவரங்களைத் தொடர்புபடுத்தி வரைகோடிடுகிறது. இரு விஷயங்களிலும், மாட்டிறைச்சி உண்ணல் கால்நடைகள் கிடைப்பதற்குச் சம்பந்தமின்றி எதிர்மறையான உறவுடன் காணப்படுகிறது. மாட்டிறைச்சி கிடைப்பது ஒரு பொருட்டே அல்ல என இது காட்டுகிறது.

மேலும், (மேலே வாதிட்டபடி), அதிக கலாசார - அரசியல் நிர்பந்தங்களைக்கொண்ட, தலித் விடுதலை இயக்கங்கள் பலவீனமாகவோ அல்லது குறைந்த வீறு கொண்டவையாகவோ இருக்கும் மாநிலங்கள் பின்முக சரிவுக்கோட்டுக்கு (linear regression line) கீழே இருக்கத் தலைப்படுகின்றன. மாட்டிறைச்சி உட்கொள்ளப்படுவதற்கும் கால்நடைகள் கிடைப்பதற்கும் உள்ள சராசரியான உறவோடு ஒப்பிடுகையில் இத்தகைய மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்ணுவது குறைவு என இது காட்டுகிறது. இந்த இரண்டுக்குமிடையிலான வேறுபாடு மாட்டிறைச்சி உண்ணுதல் நிலவுவதை பலவந்தமாகக் குறைப்பதில் கலாசார - அரசியல் நிர்பந்தமும் ஒரு முக்கிய காரணி எனக் காட்டுகிறது என நாங்கள் வாதிடுகிறோம். மாற்றிறைச்சியையொட்டி நிலவும் அரசியல் குறித்த மிக ஆழமான கட்டுரையொன்றில், மாட்டிறைச்சி உணவுப் பதார்த்தங்களுக்கான சமையல் குறிப்புகள் பொது விவாதங்களிலிருந்தும் சிற்றுண்டி விடுதிகளின் மெனுக்களிலிருந்தும் மூடி மறைக்கப்படுகின்றன (அன்வேஷி 2012) எனக் கூறப்பட்டுள்ளது. இவை இந்த அபாயம் நிறைந்த காலங்களில் மாட்டிறைச்சி குறித்த விவரங்கள் எவ்வாறு நிச்சயமாகக் குறைத்து மதிப்பிடப்படுகின்றன என்பதற்கான கலாசாரக் காட்சிப் பொருள்களாகும்.

(கட்டுரையின் நிறைவுப் பகுதி நாளை)

கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்பு: பாலமுரளி நடராஜன் [email protected] அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சியின் வில்லியம் பேட்டர்சன் பல்கலைக்கழகத்தில் மனிதவியலாளர். சூரஜ் ஜேக்கப் [email protected] உதயப்பூரிலுள்ள வித்யா பவனில் அரசியல் பொருளாதாரவாதி. இருவருமே பெங்களூரிலுள்ள அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர்களாகவும் உள்ளனர்.)

நன்றி: epw.in

தமிழில்: பா.சிவராமன்

பாகம் 1-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 2-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 3-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 4-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 5-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 6-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 7-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

பாகம் 8-இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon