மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஏப் 2018

ஸ்டிரைக்: மூடி மறைக்கும் தயாரிப்பாளர் சங்கம்!

ஸ்டிரைக்: மூடி மறைக்கும் தயாரிப்பாளர் சங்கம்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 40

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் நடைபெற்றுவரும் பல்வேறு விஷயங்களை விவாதப் பொருளாக்குவதே இத்தொடரின் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறது. திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களிடம் இருந்து வருகின்ற விமர்சனங்கள், காதில் ரத்தம் வடிகிற அளவுக்கு அதிகாலையில் தொலைபேசி வாயிலாகக் கிடைக்கும் அர்ச்சனைகள் இதனை உறுதிப்படுகின்றன.

திரையரங்கு உரிமையாளர்கள் VPF கட்டணம் செலுத்த மாட்டோம் என்று சொல்வது அவர்களது நிலைப்பாடு. அதேபோல நாங்களும் கொடுக்க மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பும் சொல்கிறது. இதனை முன்வைத்துத் தொடங்கிய வேலை நிறுத்தம் 41 நாட்களைக் கடந்திருக்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு எந்த வகையிலும் நஷ்டம் கிடையாது. மிகப் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியிருப்பது தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமே.

தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திவரும் இந்த வேலைநிறுத்தம் தன் நோக்கத்தில் இருந்து தடம் மாறிச் சென்றுகொண்டிருப்பதாகவே தெரிகிறது. வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும்போது இதனால் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு என்ன பலன் என்பதற்கு எந்த பதிலும் இருக்காது.

வேலைநிறுத்தத்தைத் தயாரிப்பாளர்கள் சங்கம் தவறாகப் பயன்படுத்துகிறதோ என்ற அச்சம் அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது. இதுவரை மூன்று டிஜிட்டல் நிறுவனங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகச் சில இணையதளங்களில் மட்டும் செய்தி வெளிவந்திருக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கத் தயாரிப்பாளர்கள் சங்கம் தயங்குவது ஏன்?

இட்லிக் கடைக்கு ஈயப் பாத்திரம் வாங்கிக் கொடுப்பதைக்கூட எட்டு ஊரைக் கூட்டி விளம்பரப்படுத்திச் செய்வது விஷால் பாணி. ஆனால், கியூப் டிஜிட்டல் கட்டணத்தில் 50% குறைத்து சேவை வழங்கத் தயார் என கூறி ஒப்பந்தம் செய்துகொண்ட நிகழ்வை பகிரங்கமாக அறிவிக்க தயக்கம் ஏன்?.

இதுவரை தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள மூன்று நிறுவனங்களும் இதனை வைத்துத்தான் நிதி திரட்ட முயற்சிக்கத் தொடங்கியுள்ளன. வட இந்திய நிறுவனம் ஒன்றுடன் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிறுவனத்தை வட இந்தியாவில் இருக்கும் திரைப்பட அமைப்புகள் தடை செய்திருப்பதாகத் தகவல் வருகிறது. காரணம் இந்த நிறுவனம் மூலம் திரையிடப்படும் படங்களில் குறியீடு இருக்காது. திருட்டு டிவிடி எங்கு எடுக்கப்படுகிறது எனக் கண்டறிய முடியாது. வட இந்தியா முழுவதும் 400 தியேட்டர்களுக்கு மட்டுமே இவர்களது சேவை உள்ளது.

தயாரிப்பாளர்களுக்கான சேவைகளை அந்த நிறுவனங்களின் மூலம் குறைவான கட்டணத்தில் பெற்றுத் தருவதற்கான முயற்சியை சங்கம் இதுவரை எடுக்கவில்லை. அதை விட்டுவிட்டு அதையும் நாமே செய்யலாம் என முயற்சிப்பது தவறாகவே முடியும் என்பது தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல.

இங்கு நடிகன் தயாரிப்பாளர் ஆனது, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் வேடம் போட்டது, விநியோகஸ்தரே தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்து நடத்தத் தொடங்கியது ஆகியவற்றால் தமிழ் சினிமா சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். தனி மனித ஈகோ தமிழ் சினிமாவை முடக்கிப் போட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் கியூப் நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்பார்க்கும் கட்டணக் குறைப்புக்கு ஒப்புக்கொண்டால் தற்போது ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்களின் நிலை என்ன? VPF கட்டணத்தைச் செலுத்தப்போவது யார்?

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் VPF கட்டணம் செலுத்துவது எங்கள் பொறுப்பு இல்லை என்பதைக் கூறுவதை விட்டு, கட்டணத்தைக் குறைப்பதற்கு கியூப் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பதற்காக இன்று மாலை தன் உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது.

திட்டமிடல், தொலைநோக்குப் பார்வை இன்றித் தொடங்கிய வேலைநிறுத்தம் எந்தத் திட்டமும் நிறைவேறாமல் முடிந்துவிடும்போல் தெரிகிறது.

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

புதன் 11 ஏப் 2018