மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

கர்நாடகப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்!

கர்நாடகப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்!

காவிரிப் பிரச்சினை தீவிரமடைந்துவரும் நிலையில் கர்நாடகப் பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்துக் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பல்வேறு கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) தமிழக கர்நாடக எல்லையில் கர்நாடக பதிவெண் கொண்ட பேருந்துகள் அனைத்தும் சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

சத்தியமங்கலம் வழியாகக் கோவை, ஈரோடு செல்லும் கர்நாடக பேருந்துகள் திம்பம் சோதனை சாவடியில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன .

தமிழகத்தில் ஏற்கனவே பதற்றம் நிலவிவருவதால் மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதன், 11 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon