தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த்தின் திரைத்துறை மற்றும் அரசியல் துறையில் 40 ஆண்டு கால சாதனைகளை விளக்கி காஞ்சிபுரத்தில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகிறது தேமுதிக.
தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும், பொதுமக்களும், மாணவ சமுதாயத்தினரும் ஒட்டுமொத்தமாகக் காவிரி தண்ணீர் கேட்டு போராடிவருகிறார்கள். , ஏன், தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களும் காவிரிக்கு உண்ணாவிரதம் போராட்டம் செய்தார்கள். இன்னும் போராட்டம் தாகம் தணியவில்லை.
இந்த நிலையில்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தின் திரை, அரசியல் சாதனைகளைப் பாராட்டி மாநாட்டினை நடத்துகிறது தேமுதிக. தமிழக மக்களின் நலன்கருதி திரைத்துறையில் விழிப்புணர்வுக் கதைகள் மூலம் எளிய ஏழை மக்களின் விடுதலை பற்றி பேசி முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டதற்கும்... . கேப்டன் மன்றத்தை இயக்கமாக மாற்றி பிறகு கட்சியாக 2005ல் உருவாக்கி சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் வரை உயர்ந்ததற்கும் பாராட்டு தெரிவித்து சாதனை விளக்க மாநாடு வரும் ஏப்ரல் 15ந் தேதி காஞ்சிபுரத்தில் நடத்துகிறார்கள்.
காவிரி பிரச்சனைகள் போராட்டம் நேரத்தில் கேப்டன் 40 ஆண்டுக்கால சாதனை மாநாடு நடத்தினால் மக்கள் என்ன ரியாக்ஷன் காட்டப்போகிறார்களோ என்ற அச்சத்துடன் புலம்புகிறார்கள் கீழ்மட்ட நிர்வாகிகள்.