மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 ஏப் 2018

ஆட்டோகிராஃபில் சொல்ல மறந்த கதை!

ஆட்டோகிராஃபில் சொல்ல மறந்த கதை!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 38

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் 2004 பிப்ரவரி 14இல் சேரன் இயக்கத்தில் வெளிவந்த படம் ஆட்டோகிராஃப். தமிழ் சினிமாவுக்குப் புத்துணர்ச்சியைத் தந்த படம். சினிமாவில் சேரன் சம்பாதித்த மொத்த வருமானத்தையும் முதலீடாக்கி தயாரித்த ஆட்டோகிராஃப் படைப்பு ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அவரை ஏமாற்றவில்லை.

தமிழகம் முழுவதும் விநியோக முறையில் ஆட்டோகிராஃப் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது வாரத்தில் அனைத்து ஏரியாக்களும் அவுட் ரேட் வியாபாரம் முடிக்கப்பட்டது. வழக்கம்போல வட ஆற்காடு விநியோக உரிமை வாங்கியவரால் வதைபட்டார் சேரன்.

ஆட்டோகிராஃப் விநியோக உரிமை வாங்கியது சிவக்குமார். முதல் வார முடிவில் வசூல் அபரிமிதமாக இருப்பதைக் கணக்கிட்டு படத்தை அவுட்ரேட் முறையில் முடித்துக்கொள்ளுமாறு தகவல் கூறுகிறார் தயாரிப்பாளர் சேரன். அவுட்ரேட் முடியாது விநியோக முறை தொடரட்டும் என மூன்றாவது குரல் கட்டளையிடுகிறது; அதுதான் சீனிவாசன். இவரது தொழில்முறை பங்குதாரர் சிவக்குமார். வங்கிக் கணக்கு முதல், காசோலை, ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவது எல்லாம் சிவக்குமார். நடைமுறைகளைத் தீர்மானிப்பது சீனிவாசன் என்பதை அறிந்து அதிர்ந்து போனார் சேரன். 15 லட்சம் ரூபாய்க்கு விநியோக உரிமை வாங்கப்பட்ட ஆட்டோகிராஃப் படத்தை 30 லட்சத்துக்கு அவுட்ரேட் செய்து கொள்ளுமாறு சீனிவாசனிடம் கூறுகிறார் சேரன். அவர் முடியாது என மறுக்க 35 லட்சத்துக்கு வேலூர் ஜி.மோகன், மாதேஸ்வரி இருவரும் இணைந்து வியாபாரத்தை முடிக்கின்றனர். இதை ஏற்க சிவக்குமார் மறுக்கிறார். சீனிவாசனை மீறி எதுவும் இவரால் செய்ய முடியாது என்கிற நிலைமை.

பஞ்சாயத்து அப்போதைய வேலூர் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் பாலாஜியிடம் போகிறது. மோகனுக்கும் தலைவர் பாலாஜிக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால் சீனிவாசனுக்குச் சாதகமாகப் படத்தை அவருக்கே கொடுக்குமாறு பேசுகிறார். இயக்குநர் சேரனோ ‘ஆட்டோகிராஃப் அந்தப் பகுதியில் தொடர்ந்து ஓடவில்லை என்றாலும் பரவாயில்லை. சீனிவாசனுக்குப் படம் தர இயலாது. நான் வாக்குக் கொடுத்தபடி மாதேஸ்வரி, மோகன் இருவருக்கும்தான் படம் தருவேன்’ என்கிறார். பஞ்சாயத்தில் சென்னை - காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் சிந்தாமணி முருகேசன் முன் போகிறது. சேரன் எடுத்த முடிவை ஆதரிக்கிறார் சிந்தாமணியார். சீனிவாசன், சிவக்குமார் இருவரையும் கடுமையாக எச்சரிக்கிறார். பாலாஜி ஏற்பாட்டில் கூடுதலாக பகடி தொகை ஒன்றை சீனிவாசனுக்கு சேரனிடமிருந்து வாங்கித் தருகிறார். படம் வாங்கியவர்களுக்கு 10 லட்சம் லாபம் கிடைக்கிறது. சிந்தாமணி முருகேசனிடம் பஞ்சாயத்து போகவில்லை என்றால் ஆட்டோகிராஃப் சீனிவாசனிடம் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கும் என்கின்றனர். இதன் விளைவாக சிவக்குமாருக்கும் சீனிவாசனுக்கும் விரிசல் ஏற்படுகிறது. அதனால் வேலூர் விநியோகத் துறையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? நாளை காலை 7 மணி அப்டேட்டில்...

கள்வனின் காதலி உண்மை நிலை என்ன?

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லட்சுமணன் குறைந்தபட்ச முதலீட்டில் தொடங்கிய படம். இந்தப் படத்தின் குறிப்பிட்ட இரண்டு ஏரியாக்களை வாங்கியிருந்த சீனிவாசன் இறுதியில் படத்தின் நெகட்டிவ் ஃபைனான்ஸையும் கிளியர் செய்து கொடுத்தார் என்கிறார் இப்படத்தின் ஃபைனான்ஸ் வியாபாரங்களைக் கவனித்து வந்த ரெங்கநாதன். படத்தின் தயாரிப்பாளர் லெட்சுமணன் செய்தியைப் படித்துவிட்டு உண்மையை எழுதியமைக்கு நன்றி என நமக்குத் தகவல் அனுப்பி இருக்கிறார்.

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

சனி 7 ஏப் 2018