மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

தேசியக் கொடியைச் சேதப்படுத்துவோருக்கு மூன்றாண்டு சிறை!

தேசியக் கொடியைச் சேதப்படுத்துவோருக்கு மூன்றாண்டு சிறை!

மின்னம்பலம்

பொது இடத்தில் தேசியக் கொடியை எரித்தல் மற்றும் சேதப்படுத்துவோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனச் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, சுவாமிமலையைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் தேசியக் கொடியை எரித்து, முகநூல் பக்கத்தில் பகிர்ந்து போராட்டம் நடத்தினார். இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தேசியக் கொடி குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேசிய, கலாசார, விளையாட்டு நிகழ்ச்சிகளில் காகித தேசியக் கொடியைப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார். அந்தக் கொடியை நிகழ்ச்சி முடிந்தவுடன் தரையில் போடக் கூடாது.

தேசியக் கொடி உரிய கண்ணியத்துடன் மதிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக, பொது இடங்களில் தேசியக் கொடியை எரித்தல் அல்லது சேதப்படுத்துவோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

வியாழன், 5 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon