மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

முந்திரி ஏற்றுமதி 9% உயர்வு!

முந்திரி ஏற்றுமதி 9% உயர்வு!

மின்னம்பலம்

2017-18 நிதியாண்டின் ஏப்ரல் - ஜனவரி மாதங்களில் இந்தியாவின் முந்திரி ஏற்றுமதி 9 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் இந்தியா மொத்தம் 73,810 டன் அளவிலான முந்திரியை ரூ.5,131.73 கோடி மதிப்புக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2016-17 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த அளவு 67,742 டன்னாக மட்டுமே (ரூ.4,179.72 கோடி) இருந்தது. மேலும் முந்திரியின் சராசரி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.617.01லிருந்து ரூ.695.26 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், கச்சா முந்திரிப் பருப்பு உற்பத்தியில் ஈடுபடும் நாடுகளில் அவற்றின் விலை அதிகமாக இருந்ததால் இந்தியாவின் இறக்குமதி 11 சதவிகிதம் வரையில் குறைந்துள்ளதாக இந்திய முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் செயலாளரான எஸ்.கண்ணன் பிசினஸ் லைன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் - ஜனவரி காலகட்டத்தில் கிலோ ரூ.135.19 என்ற விலையில் மொத்தம் ரூ.7,931.29 கோடி மதிப்பிலான 5,86,663 டன் கச்சா முந்திரிப் பருப்பை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. 2016-17 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கிலோ ரூ.111.45 என்ற விலைக்கு 6,58,461 டன் அளவிலான கச்சா முந்திரிப் பருப்பை ரூ.7,338.69 கோடி மதிப்புக்கு இந்தியா இறக்குமதி செய்திருந்தது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதால் இறக்குமதி இவ்வாறு குறைந்துள்ளதாக முந்திரி மற்றும் கொக்கோ மேம்பாட்டு இயக்குநரகம் கூறுகிறது. இதன் தரவுகளின்படி, இந்தியாவின் முந்திரிப் பருப்பு உற்பத்திப் பரப்பு (2011-12) 6,92,000 டன்னிலிருந்து (2016-17) 7,79,335 டன்னாக உயர்ந்துள்ளது தெரியவருகிறது.

வியாழன், 5 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon