மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

ஜிஎஸ்டி சிறப்புக் குழு அமைப்பு!

ஜிஎஸ்டி சிறப்புக் குழு அமைப்பு!

ஜிஎஸ்டி நெட்வொர்க் தளத்தில் உள்ள தொழில்நுட்ப இடையூறுகளைக் கண்காணித்து அவற்றுக்குத் தீர்வு காணும் சிறப்புக் குழு ஒன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏப்ரல் 4ஆம் தேதி மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புக் குறைதீர்ப்புக் குழுவானது வரி செலுத்துவோர் சந்திக்கும் பிரச்சினைகளையும், அவர்களின் புகார்களையும் ஏற்று அதற்கான தீர்வுகாணும் பரிந்துரைகளை ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைப்புக்கு வழங்கும். எனினும், வரி செலுத்துவோர் சந்திக்கும் இணையச் சேவை துண்டிப்பு, மின் இணைப்பில் பிரச்சினை போன்ற புகார்கள் இத்திட்டத்தில் அடங்காது’ என்று கூறப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதியில் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் சமயத்தில் வரி செலுத்துவோர் ஏதேனும் தொழில்நுட்ப இடையூறுகளைச் சந்தித்தால் அவர்கள் உடனடியாகப் புகாரளித்து அதற்கான தீர்வு பெறலாம். ஒருவேளை டிரான் - 1 படிவத்தைத் தாக்கல் செய்பவர்கள் ஏதேனும் இடையூற்றைச் சந்தித்தால் அவர்களுக்கு ஏப்ரல் 30 வரையில் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அந்த டிரான் - 1 படிவத்துக்கான ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டன் மே 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

புதன், 4 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon