மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

எங்களைப் போல் அம்பேத்கரைக் கௌரவிப்பவர்கள் இல்லை!

எங்களைப் போல் அம்பேத்கரைக் கௌரவிப்பவர்கள் இல்லை!

தங்கள் அரசாங்கம் கௌரவித்ததைப் போன்று, வேறு எந்த அரசாங்கமும் அம்பேத்கரைக் கௌரவிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற எம்.பிக்களுக்கான புதிய குடியிருப்புப் பகுதி விரிவாக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்ரல் 4) பங்கேற்று உரையாற்றினார். அப்போது, “அரசியல் ஆதாயத்துக்காகப் பல்வேறு கட்சிகளும் அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்துகின்றன. ஆனால், அவரது கனவுகளை நனவாக்கியது பாஜக அரசுதான். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அம்பேத்கர் சர்வதேச மையம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அவருக்கு அடுத்து வந்த அரசாங்கம் இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டுவிட்டது. மீண்டும் பாஜக ஆட்சி வந்ததும், அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது” என்று கூறினார்.

அம்பேத்கரின் முக்கியக் கொள்கைகளில் சமாதானம், ஒற்றுமை ஆகியவையே பிரதானம். அதே கொள்கைகளுடன் எளிய மக்களின் நலனுக்காகவே பாஜக அரசும் செயல்பட்டுவருகிறது. அம்பேத்கர் காட்டிய பாதையில் தனது அரசாங்கம் நடப்பதாகவும் அனைத்துக் கட்சிகளும் நாட்டின் வளர்ச்சிக்காக அதே பாதையில் செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்திய மோடி, தங்கள் அளவுக்கு எந்தக் கட்சியும் அம்பேத்கரைக் கௌரவப்படுத்தியது இல்லை எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அம்பேத்கரின் உயிர் பிரிந்த இடமான டெல்லி அலிப்பூர் சாலையில் உள்ள 26ஆம் எண் கொண்ட வீடு, அவரது பிறந்த நாளான வரும் 13ஆம் தேதி நினைவு இல்லமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.

வியாழன், 5 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon