மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஏப் 2018

யானைக்கு அடிசறுக்கிய கதை தெரியுமா?

யானைக்கு அடிசறுக்கிய கதை தெரியுமா?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 35

இராமானுஜம்

சினிமாவில் வெற்றி என்பது கடல் அலை போன்றது மென்மையாகக் கால்களை வருடி சுகத்தையும் கொடுக்கும். அதேசமயம், சுனாமி போன்று ஆழி பேரலையாக மாறி கடலுக்குள் இழுத்துக்கொண்டு போய்விடுவதும் உண்டு. அதனால்தான் சினிமாவில் வெற்றியின் மிதப்பில் தலைகால் தெரியாமல் ஆடியவர்களின் தலை, சில காலத்துக்குப் பின்னால் திரையில் காணாமல் போனதும் உண்டு. என்ன தான் தொழில் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு கிடைத்தாலும் நேர்மையாக இல்லை என்றால் தோல்வி நிச்சயிக்கப்பட்டுவிடும்.

வடஆற்காடு விநியோகப் பகுதியில் தன்னை எதிர்த்தவர்களை மனிதாபிமானமின்றி அசுர பலத்துடன் சீனிவாசன் அதகளம் செய்துவந்த நேரம் அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் அடங்க மாட்டேன் என ஆர்ப்பரித்தார் சேத்பட் ராஜன் தியேட்டர் உரிமையாளர் கோபி.

சேத்பட்டில் பத்மாவதி, ராஜன் என இரு தியேட்டர்கள் உள்ளது. பத்மாவதி தியேட்டரை விநியோகஸ்தர் விவேகானந்தன் குத்தகைக்கு நடத்திவந்தார். ராஜன் தியேட்டர் சீனுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரால் நியமிக்கப்பட்ட ஆட்களே நிர்வாகத்தை நடத்தி வந்தனர். ஒருகட்டத்தில் வடஆற்காடு பகுதியில் திரையரங்குகளைக் குத்தகைக்கு எடுக்கக் களமிறங்கியது சுரேஷ் புரொடக்ஷன். இவர்கள் தலைதூக்கி விட்டால் தன் தலை தாழ்ந்து விடும் என்பதால் அதற்கு எதிரான நடவடிக்கையில் சீனு தீவிரமாக ஈடுபட்டார்,

இது தொழில் செய்பவர்கள் இயல்பு என்றாலும் அதில் நேர்மையும் - கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயமாகிவிடும். ஆனால், சீனிவாசன் வெற்றியின் ரகசியமே குறுக்கு வழிதான் என்கிறது வேலூர் விநியோகஸ்தர்கள் வட்டாரம். ராஜன் தியேட்டரை சுரேஷ் புரொடக்ஷனுக்கு குத்தகைக்கு கொடுக்கப்போவதாக உரிமையாளர் கோபி கூறியவுடன், சீனு தனது வழக்கமான ஆட்டத்தை கியூப் துணையுடன் ஆடத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

திருட்டுதனமாக சேத்பட் ராஜன் தியேட்டரில் எடுக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராஜன் தியேட்டர் உரிமையாளர் ராஜன் எதற்கும் அஞ்சவில்லை. திருட்டு DVD எடுக்கப்பட்டது உண்மையாக இருக்கும் பட்சத்தில் முதல் குற்றவாளி சீனு தான் என்றார் ராஜன். ‘தியேட்டர் எனக்குச் சொந்தமானது. ஆனால், தியேட்டரை நடத்துவது, படம் போடுவது, தியேட்டரை நிர்வாகம் செய்யும் ஆட்களை நியமிப்பது, அவர்களைக் கண்காணிப்பது எல்லாம் சீனிவாசனும், அவரது மேலாளருமான பாலா என்கிற பாலமுருகன்தான்’ என வெடிகுண்டை வீசினார் கோபி. ஆனால், இதற்கு எழுத்துபூர்வமான எந்த டாக்குமென்ட்டும் இல்லை என்பதால் சீனு இப்பிரச்சினையில் சிக்கவில்லை. தியேட்டர் மூடப்பட்டது. சட்ட ரீதியாக இப்பிரச்சினையை எதிர்கொண்ட கோபி பிரச்சினையை முடித்து, தான் விரும்பியபடி சுரேஷ் புரொடக்ஷன் வசம் தியேட்டரை ஒப்படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் அது கோபியினால் ஏற்பட்டது சீனிவாசனுக்கு.

தயாரிப்பாளர்கள் சங்க மறுப்பும் விளக்கமும்...

நேற்று காலை 7 மணி பதிப்பில் செய்யாறு செல்லம் பாரடைஸ், VAB தியேட்டர் சம்பந்தமாக எழுதப்பட்ட கட்டுரையில் திருட்டு DVD வழக்கு சம்பந்தமாக சீனிவாசனிடம் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் பொறுப்பை ஒப்படைத்ததாகக் குறிப்பிட்டிருந்தோம். இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர் சங்கர் நம்மைத் தொடர்பு கொண்டார். செல்லம் பாரடைஸ் தியேட்டர் திருட்டு DVD வழக்கு சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கண்காணித்தவன் நான். நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல் சீனிவாசனிடம் பொறுப்பை விஷால் ஒப்படைக்கவில்லை. செல்லம் பாரடைஸ் தியேட்டரை நடத்தி வந்தது சீனிவாசன். அவரது பெயரில் எந்தவிதமான குத்தகை ஒப்பந்தமும் எழுத்துபூர்வமாக இல்லாததால், உரிமையாளர் தேவையின்றி குற்றவாளியாக்கப்பட்டார். இந்த விஷயத்தில் தலைவர் என்ற முறையில் தியேட்டர் உரிமையாளருக்குத் தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாகவும், அவர்களது தொலைபேசி எண்ணை தருமாறும் கேட்டுள்ளனர்.

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

புதன் 4 ஏப் 2018