மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

வாட்ஸப் வடிவேலு: அடடா... இதுவல்லவா உண்ணாவிரதம்!

வாட்ஸப் வடிவேலு: அடடா... இதுவல்லவா உண்ணாவிரதம்!

ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் என்ற நூல், 1891ஆம் ஆண்டில் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை என்பவரால் எழுதி வெளியிடப்பட்டது. கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியை 1894ஆம் ஆண்டில் வெளியிட்டார். மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த்தாய் வணக்கப் பாடலான ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970இல் அறிவிக்கப்பட்டது. இன்று அவருடைய பிறந்த நாள். ஆனால் அவற்றையெல்லாம் அறியாத இன்றைய தலைமுறையினர், புதுவித உண்ணாவிரதம் பற்றி இணையத்தில் ஆழ்ந்து பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

“என்னாச்சு வடிவேலு, சுத்தத் தமிழ்ல பேசுற போல... எதிர்த்த மாதிரி தமிழ் வாத்தியாரை பார்த்துட்டியா?”ன்னு கேட்டு, நம்ம மைண்ட், மனசு எல்லாத்தையும் மாத்தி விட்டுடறாங்க.

சரி உண்ணாவிரதமாச்சும் இருக்க போலாமேன்னு பார்த்தா சாயங்காலமே ஜூஸ் குடிச்சு உண்ணாவிரதத்தை முடிச்சிட்டாங்களாம். காலைல வீட்ல சாப்பிட்டு வந்து, மதியம் சைட்ல பிரியாணிய சாப்பிட்டு, சாயங்காலம் ஜூஸ் குடிக்கிறதுக்குப் பேரு உண்ணாவிரதமா? ஏம்மா... இதெல்லாம் ஓர் உண்ணாவிரதமா ?

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...

அடேய் கோமுட்டிதலையா மத்த நாள்ல மூணு நேரமும் சோத்துகில்லாம வீட்ல கிடப்பானுக... கட்சி செலவில் மூக்குப் பிடிக்க மூணு நேரமும் திங்கறதுக்கு பேருதான் உண்ணாவிரதம் - அப்படின்னும் சிலர் காமெடியா சொல்ற அளவுக்கு ஆகிட்டு நிலைமை.

உண்ணாவிரதத்துக்கு உணவு இடைவேளைவிட்ட முதல் தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.

காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்துக்கு வருவது, மாலை 5 மணி ஆனவுடன் வீட்டுக்குச் சென்று விடுவது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை வேறு... கேட்டால் மக்களின் துயர் துடைக்கத் தமிழக அரசின் உண்ணாவிரதம் எனப் பீற்றிக்கொள்வது... - அப்படி புலிகேசி ஸ்டைலில் கலாய்த்தாலும் பலர் கண்டுகொள்ளவே இல்லை.

ஏன்டா மீம்ஸ் போட்டு கொல்றீங்க... நாங்க என்ன உங்களை மாதிரி திருடியா தின்னோம்... உண்ணாவிரதம் இருந்துதானே தின்னோம்.. - அப்படி வீரபாகு ஸ்டைலில் நக்கலடித்தாலும் எட்டிப்பார்ப்பதாக இல்லை.

எது எப்படியோ, வரலாறு காணாத உண்ணாவிரதத்தை நாம் நடத்தி காட்டிவிட்டோம்.

பசிக்குது... இருந்தாலும் நான் உண்ணாவிரதமே இருந்துகிறேன்.

செவ்வாய், 3 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon