மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

சிறு நிறுவன வங்கிக் கடன் அதிகரிப்பு!

சிறு நிறுவன வங்கிக் கடன் அதிகரிப்பு!

சென்ற பிப்ரவரி மாதத்தில் சிறு நிறுவனங்கள் துறைக்கான வங்கிக் கடன் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்ச் 28ஆம் தேதி ரிசர்வ் வங்கி தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியத் தொழில் துறைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் பிப்ரவரி மாதத்தில் 1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இது 5.2 சதவிகித சரிவைச் சந்தித்திருந்தது. குறிப்பாகச் சிறு நிறுவனங்களுக்கான கடன் 4 சதவிகிதமும், நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் 2.3 சதவிகிதமும் மற்றும் பெரு நிறுவனங்களுக்கான கடன் 0.4 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. ஜவுளி, ரசாயனம், பொறியியல், உணவு பதப்படுத்துதல், ரப்பர், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகிய துறைகளுக்கான கடன் உயர்ந்துள்ளது. ஆனால், உள்கட்டமைப்பு, உலோகம், சிமென்ட், பெட்ரோலியம், நிலக்கரி, அணு எரிபொருள் போன்ற துறைகளுக்கான கடன் சரிவடைந்துள்ளது.

வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கான கடன் 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சேவைகள் துறைக்கான கடன் 14.2 சதவிகிதமும், தனிநபர் கடன் 20.4 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் சேவைகள் துறைக்கான கடன் 7.7 சதவிகிதமும், தனிநபர் கடன் 12 சதவிகிதம் உயர்ந்திருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் பட்டியலிடப்பட்ட 41 வணிக வங்கிகளின் கடன் விவரங்களைக் கொண்டு ரிசர்வ் வங்கி இந்த அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. உணவு சாராத துறைகளுக்கான கடன் 9.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இது 3.3 சதவிகிதமாக மட்டுமே இருந்தது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon