மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

த்ரிஷாவின் சாகசப் பட்டியல்!

த்ரிஷாவின் சாகசப் பட்டியல்!

சுற்றுலா செல்லும்போது தனக்கு உணவுக் கட்டுப்பாடு என்பது அறவே இருக்காது என்று தெரிவித்துள்ளார் நடிகை த்ரிஷா.

தமிழில் பல படங்களில் பிஸியாக நடித்துவரும் த்ரிஷா அடிக்கடி வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செல்வதில் ஆர்வம்கொண்டவர். தன் நண்பர்களுடன் பொது விடுமுறை இல்லாத நாட்களில் சுற்றுலா செல்வது அவருக்குப் பிடித்த விஷயம். சமீபத்தில் ஸ்காட்லாந்து சென்றுவந்துள்ள இவர் இதுகுறித்து தன் அனுபவத்தைக் கூறும்போது, “எனக்குச் சுற்றுலா செல்வது என்றால் பிடிக்கும். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் எங்காவது சென்றுவிடுவேன். நியூயார்க் எனக்கு ரொம்பப் பிடித்த சுற்றுலா தலமாகும். நிறைய முறை அங்கு போயிருக்கிறேன். ஷாப்பிங் செய்ய துபாய், லண்டன், நியூயார்க் ஆகியவை சிறந்த இடங்கள். நான் நிறையப் பொருட்களை வாங்கி இருக்கிறேன். வெளியே போகும்போது ஒரு சூட்கேசுடன் செல்வேன். திரும்பி வரும்போது என் பின்னால் நிறைய சூட்கேஸ் கியூவில் வரும். அந்த அளவுக்குப் பொருட்களை வாங்கிக் குவித்திருப்பேன். இதுவரை ஷாப்பிங் செய்தவற்றில் மிகவும் சிறந்ததாக நான் கருதுவது சுவிஸ் வாட்ச். வெனிஸ் சென்றபோது இதை வாங்கினேன்" என்று கூறியுள்ளார்.

"சாகசப் பயணங்கள், பங்கி ஜம்ப், ஸ்கை டைவிங் போன்றவைகளும் எனக்குப் பிடித்தமானவை. வீட்டில் இருக்கும்போது ஓய்வு கிடைத்தால் பீச் அல்லது மலைப்பிரதேசங்களுக்குச் சென்றுவிடுவேன். சுற்றுலா செல்லும்போது உணவுக் கட்டுப்பாடு இருக்காது. விரும்பிய எல்லாவற்றையும் சாப்பிடுவேன். அப்போது நிறைய நடந்து செல்ல வேண்டி இருப்பதால் சரியாகிவிடும். சமீபத்தில் நெதர்லாந்து சென்றுவந்தேன். அங்குள்ள மலர்த் தோட்டங்களைச் சுற்றிப்பார்த்தேன். தற்போது வெளிநாட்டுப் பயணங்களை முடித்துவிட்டு மனசு நிறையப் புத்துணர்ச்சியோடு திரும்பியிருக்கிறேன். அதன்பிறகு படப்பிடிப்புகளில் உற்சாகமாகக் கலந்துகொள்வேன்”என்று தெரிவித்துள்ளார்.தற்போது இயக்குநர் வர்ணிக் இயக்கத்தில் பெண் துப்பறிவாளராக நடிகை த்ரிஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon