மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

ஸ்பைஸ் ஜெட்: பணிப் பெண்களின் ஆடைகளைக் களைந்து சோதனையா?

ஸ்பைஸ் ஜெட்: பணிப் பெண்களின் ஆடைகளைக் களைந்து சோதனையா?

சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியர்களின் ஆடைகளைக் களைந்து சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து தரையிறங்கிய பிறகு, உணவு மற்றும் பிற பொருட்களின் விற்பனையிலிருந்து சேகரிக்கப்பட்ட பணத்தை ஊழியர்கள் ஏமாற்றுகிறார்கள் என்னும் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் சோதனை நடைபெற்றது. அப்போது, பெண்களின் ஆடைகளைக் களைந்து சோதனையிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“என்னைத் தகாத இடத்தில் தொட்டு ஒருவர் சோதனை செய்தார். நான் வெற்று உடலில் இருந்தேன். எனக்கு அவமானமாக இருந்தது” எனப் பெண் ஒருவர் கூறியுள்ளார்.

“மார்ச் 28 மற்றும் மார்ச் 29ஆம் தேதி இரவுகளில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தர நிலை நடைமுறைகளின் ஒரு பகுதியாகச் சில இடங்களில் சோதனை நடைபெற்றது. ஆனால் பெண்களின் ஆடைகளைக் களைந்து சோதனையிடவில்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால், உரிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“நிறுவனத்தின் பொருட்கள் முறைகேடான வகையில் விற்கப்படாமலும், கடத்தப்படாமலும் இருக்க இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இது பயணிகளுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. இந்திய விமான நிலையங்களில் அனைத்துப் பயணிகளுக்கும் நடைபெறும் சோதனை போன்றே இவர்களுக்கும் நடத்தப்பட்டது. ஒரு அறையில் நன்கு பயிற்சி பெற்றவரால்தான் சோதனை நடத்தப்பட்டது. பெண்களைப் பெண்களும் ஆண்களை ஆண்களும்தான் சோதனை செய்தார்கள். இதில் ஒருசில முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon