மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

அதிநவீன வசதிகளுடன் கோவை டு பெங்களூரு அரசுப் பேருந்து!

அதிநவீன வசதிகளுடன் கோவை டு பெங்களூரு அரசுப் பேருந்து!

கோவையில் இருந்து பெங்களூருக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசுப் பேருந்து சேவையைக் கர்நாடக அரசு நேற்று (மார்ச் 30) முதல் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் தொழில் நகரமான கோவையில் இருந்து பெங்களூருக்கு ஏராளமான ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், தற்போது அதிநவீன வசதிகளுடன் முதன்முறையாகக் கோவையிலிருந்து பெங்களூருக்குப் பேருந்து சேவையைக் கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பேருந்து சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தில் பயணிப்பவர்களுக்கு வைஃபை வசதியுடன் கூடவே கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து கோவையில் இருந்து புறப்பட்டு பெங்களூரூ விமான நிலையத்தை 8 மணி நேரத்தில் சென்றடைகிறது. மதியம் 12 மணிக்குப் புறப்பட்டு இரவு 8 மணிக்கு பெங்களூரை அடையும். இதனையடுத்து மீண்டும் அதிகாலை 3 மணிக்குப் புறப்பட்டு காலை 10.45 மணிக்குக் கோவை வந்தடையும். இந்தப் பேருந்தில் பயணம் செய்ய ரூ.1,100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon