மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 14 டிச 2019

உயிரிழந்த 14 காவல் துறையினரின் குடும்பத்துக்கு நிதி!

உயிரிழந்த 14 காவல் துறையினரின் குடும்பத்துக்கு நிதி!

தமிழகத்தில், உடல்நலக் குறைவு மற்றும் விபத்தில் பலியான காவல் துறையைச் சேர்ந்த 14 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 31) உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையில் பல்வேறு பணிகளில் இருந்த 10 காவலர்கள் அண்மையில் உடல்நலக் குறைவால் காலமானார்கள். நால்வர் விபத்தில் மரணமடைந்தார்கள். இவர்களுடைய விவரங்களைத் தன் அறிக்கையில் வெளியிட்டுள்ள முதல்வர், “உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த மேற்கண்ட 14 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று அறிவித்துள்ளார்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon