மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 16 டிச 2019

ஐசிஐசிஐ கடன் விவகாரம்: சிபிஐ விசாரணை!

ஐசிஐசிஐ கடன் விவகாரம்: சிபிஐ விசாரணை!

வீடியோகான் நிறுவனத்திற்குக் கடன் வழங்கிய விவகாரத்தில் அதன் தலைவர் வேணுகோபால் தூத் மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயலதிகாரி சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் ஆகிய இருவருக்கும் எதிராக சிபிஐ தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.

வீடியோகான் நிறுவனம் 2012ஆம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கியிடம் தனது தொழில் தேவைக்காக ரூ.3,250 கோடி கடன் பெற்றுள்ளது. கடன் பெற்ற அடுத்த ஆறு மாதங்களில் இந்நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயலதிகாரியான சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சரும் அவரது உறவினர்கள் இருவர் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒன்றுக்கு கோடிக் கணக்கில் நிதி வழங்கியுள்ளது. அதாவது, 2010ஆம் ஆண்டில் மோசடியான வகையில் தீபக் கோச்சருக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றை ரூ.9 லட்சத்துக்கு டிரஸ்ட் ஒன்றுக்குக் கைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வேணுகோபால் தூத்துக்கு ரூ.64 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, ஐசிஐசிஐ வங்கியின் இதர கடன் நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. வேறு ஏதேனும் மோசடி நடந்துள்ளதா என்று சந்தேகித்துள்ள செபி அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் இந்த மோசடி விவகாரத்தில் சிபிஐ தனது முதற்கட்ட விசாரணையை தீபக் கோச்சர் மற்றும் வேணுகோபால் தூத் ஆகியோரிடையே தொடங்கியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் சாந்தா கோச்சரின் பெயர் சிபிஐ விசாரணையில் இடம்பெறவில்லை. வீடியோகான் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி உட்பட இந்தியாவின் 20 வங்கிகளிடம் மொத்தம் ரூ.40,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon