மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: கொண்டைக்கடலை - பலாக்கொட்டை குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: கொண்டைக்கடலை - பலாக்கொட்டை குழம்பு!

தேவையானவை

கொண்டைக்கடலை - கால் கிலோ

பலாக்கொட்டை - 15

தக்காளி - இரண்டு

சின்ன வெங்காயம் - 10

மசால் பொடி - இரண்டு ஸ்பூன்

மிளகாய் பொடி - 1 ஸ்பூன்

புளி - நெல்லிக்காய் அளவு

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - சிறிது

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

அரைக்க:

தேங்காய் - சிறிது

வேக வைத்த பலாக்கொட்டை - 10

பூண்டு - 10 பல்

பெருஞ் சீரகம் - சிறிது

செய்முறை:

கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பலாக்கொட்டையைத் தோல் உரித்து இரண்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

வெங்காயத்தை நீளமாக வெட்டியும், தக்காளியைத் துண்டுகளாக நறுக்கியும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருள்களை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு, வெடித்த உடன் கறிவேப்பிலை போட்டு, அடுத்து வெங்காயம் ,தக்காளி சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்த உடன் மிளகாய், மசால் பொடிகளை போட்டு கலர் மாறிய உடன் புளியைக் கரைத்து ஊற்றி இறுதியில் அரைத்த விழுதை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான உப்பைப் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.

குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி பெருங்காயம் சேர்க்க வேண்டும்.

கீர்த்தனா சிந்தனைகள் :

பணத்தை போட்டோவில் பார்த்திருப்பீங்க, படத்தில பார்த்திருப்பீங்க... ஆனா, பர்ஸில் இருந்து பார்த்திருக்கவே மாட்டீங்க.

மாசக்கடைசி

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon