மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

முன்னணி வீராங்கனைகள் வெளியேற்றம்!

முன்னணி வீராங்கனைகள் வெளியேற்றம்!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓப்பன் தொடரில் இன்று (மார்ச் 31) நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் ஜெலினா ஒஸ்டப்பென்கோ மற்றும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் இருவரும் பலபரிட்சை நடத்த உள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 17ஆம் தேதி தொடங்கிய மியாமி ஓப்பன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் முன்னணி வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், முகுருசா, வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் வோஸ்னியாக்கி போன்றவர்கள் லீக் ஆட்டங்களிலே வெளியேறி ஏமாற்றமளித்தனர். கடைசியாக நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் தொடரிலும் முன்னணி வீராங்கனைகள் எவரும் இறுதிப்போட்டிக்குள் நுழையவில்லை.

மியாமி ஓப்பன் தொடரில் இன்று நடைபெறவிருக்கும் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 137ஆவது இடத்தில் உள்ள ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மற்றும் தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள ஜெலினா இருவரும் பலபரிட்சை நடத்த உள்ளனர். ஜெலினா இதுவரை ஒரே ஒரு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஸ்லோன் ஸ்டீபன்ஸ் இதுவரை 5 சாம்பியன் பட்டங்களை பெற்றுள்ளார். இருவரும் தற்போது இறுதிப்போட்டியில் மோத உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீரரான ஜான் இஸ்னர் மற்றும் ஜெர்மன் வீரரான அலெக்சாண்டர் ஜுரோவ் உடன் மோத உள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும் முன்னணி வீரர்கள் ரோஜர் ஃபெடரர், நவாக் ஜோகோவிச் ஆகியோர் லீக் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தனர். ரபேல் நடால் மற்றும் ஆன்டி முர்ரே ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. எனவே பெரும்பாலும் இளம் வீரர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon