மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

5 லட்சம் அபராதம் வசூலித்த போக்குவரத்துக் கழகம்!

5 லட்சம் அபராதம் வசூலித்த போக்குவரத்துக் கழகம்!

சென்னை மாநகரப் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடமிருந்து கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 5 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு, பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால்,போக்குவரத்துக் கழகத்துக்கு வருமானமும் குறைந்தது. இதைச் சரிசெய்யப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பயணிகள் அனைவரும் டிக்கெட் எடுத்துவிட்டதை உறுதிசெய்ய, எழுந்து சென்று பயணிகளிடம் டிக்கெட் கொடுக்கவும், பயண அடையாள அட்டை வைத்திருந்தாலும் அதை வாங்கிச் சரிபார்க்கவும் நடத்துநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயரதிகாரிகளும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டனர். ஆங்காங்கே டிக்கெட் பரிசோதகர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டுவந்தனர்.

“பிப்ரவரி மாதம் டிக்கெட் இல்லாமல் பயணித்த 2 ஆயிரத்து 130 பயணிகளிடமிருந்து 3 லட்சத்து 21,550 ரூபாயும், மார்ச் மாதம் டிக்கெட் இல்லாமல் பயணித்த 1,305 பயணிகளிடமிருந்து 2 லட்சத்து 61,100 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியைவிட மார்ச் மாதத்தில் அபராதம் கட்டியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தச் சோதனை தொடர்ந்து நடைபெறும்” என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon