மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

ரயில் கட்டணம் : 5% தள்ளுபடி!

ரயில் கட்டணம் : 5% தள்ளுபடி!

ரயில் நிலைய கவுன்டரில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, ரயில் கட்டணத்தில் 5 % தள்ளுபடி அளிக்கப்படும் எனத் தென்னக ரயில்வே நேற்று (மார்ச் 30) அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்களில், 'டிஜிட்டல்' முறையில், யுபிஐ வசதியில் பணப் பரிமாற்றம் செய்து, டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு அடிப்படைக் கட்டணத்தில் 5% தள்ளுபடி அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம், ஏப்ரல் 2 முதல் மூன்று மாதத்துக்குச் சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது., 100 ரூபாய்க்கும் அதிகமான கட்டணம் உள்ள டிக்கெட்டை வாங்குபவர்களுக்கு அந்தக் கட்டணத்தில் 5% தள்ளுபடி செய்யப்படும். அதிகபட்சமாக, 50 ரூபாய் வரை மட்டுமே சலுகை பெற முடியும் எனத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் மட்டுமே இத்திட்டம் செல்லுபடியாகும். இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் மாதாந்தர சீசன் டிக்கெட் எடுப்பவர்களுக்கும் இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon