மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

உருளைக் கிழங்கு விலை உயர்வு!

உருளைக் கிழங்கு விலை உயர்வு!

உருளைக் கிழங்கு உற்பத்தி குறைந்துள்ளதால் அவற்றின் விலை சென்ற ஆண்டு அளவை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து இந்தியாவின் உருளைக் கிழங்கு உற்பத்தியில் மேற்கு வங்க மாநிலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. இங்கு தற்போது ஒரு குவிண்டால் உருளைக் கிழங்கின் விலை ரூ.1,000 ஆக உள்ளது. ஆனால் சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் அதன் விலை ரூ.400 முதல் ரூ.450 வரையில் மட்டுமே இருந்தது. இந்த விலை உயர்வுக்குக் காரணம் உற்பத்திச் சரிவால் சந்தையில் ஏற்பட்ட விநியோகத் தட்டுப்பாடுதான் என்கிறார்கள் வியாபாரிகள். உத்தரப் பிரதேச மாநிலத்திலும் உருளை உற்பத்தி 20 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. இங்கு உருளைக் கிழங்கின் மொத்த விற்பனை விலை குவிண்டால் ஒன்றுக்கு 1,300 ரூபாயை நெருங்கியுள்ளது.

உருளைக் கிழங்கின் சாகுபடிப் பருவம் நிறைவடைந்துள்ளதால் தேவையைப் பூர்த்தி செய்யக் கிடங்குகளில் இருப்பு வைத்திருந்த உருளைக் கிழங்குகளைத்தான் இனி பயன்படுத்த வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உருளை வியாபாரியான அஜித் ஷா பிசினஸ் ஸ்டேண்டர்டு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டில் மேற்கு வங்க மாநிலத்தில் உருளை உற்பத்தி 11 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டில் உற்பத்தி அளவு 9 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த உருளைக் கிழங்கு உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு 40 முதல் 45 மில்லியன் டன்னாக இருக்கிறது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon