மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

சம்மர் ஸ்பெஷல்: பருமனான பெண்களுக்கு ஏற்ற ஆடைகள்!

சம்மர் ஸ்பெஷல்: பருமனான பெண்களுக்கு ஏற்ற ஆடைகள்!

சைஸ் ஸீரோ பெண்கள்தான் ஃபேஷனில் கலக்க வேண்டும் என்கிற விதிமுறை மலையேறிவிட்டது. ப்ளஸ் சைஸ் பெண்கள் மீதுதான் இன்றைய ஃபேஷன் அட்டென்ஷன் இருக்கிறதென்றே சொல்லலாம். கொஞ்சம் வெயிட்டா இருந்தா ஸ்டைல் பண்ணக்கூடாதா என்ன? ப்ளஸ் சைஸ் பெண்களுக்கான சம்மர் அவுட்ஃபிட் ஐடியாக்கள் நிறைய இருக்கின்றன.

உடல் பருமன் கொண்ட பெண்கள் ஆடையில் உள்ள பேட்டர்ன்கள் மூலமாகவும் தங்களின் பருமனைக் குறைத்துக் காட்ட முடியும். உடலில் எந்தப் பகுதி ஹெவியாக இருக்கிறதோ, அங்கு பெரிய அளவிலான பேட்டர்ன்கள் உள்ளவாறு ஆடையைத் தேர்ந்தெடுங்கள். இதற்கு ஃபுளோரல் டிசைன் உங்களுக்குச் சரியாக இருக்கும். அதுவும் பெரிய அளவிலான பூக்கள் கொண்ட ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். மற்றவர்களின் கவனம் அந்தப் பூக்களின் மீது சென்றுவிடும்.

அடுத்ததாக ஹாரிசான்ட்டல், வெர்ட்டிக்கல் ஸ்ட்ரைப்ஸ் கொண்ட ஆடைகள் உங்களை ஒல்லியாகக் காட்டும். இதில் சுடிதார், குர்தா, ஸ்கர்ட் என எந்த உடையானாலும் அதில் ஸ்ட்ரைப்ஸ் பேட்டர்ன் இருந்தால் கட்டாயம் வாங்குங்கள்.

பளபளக்கும் உடைகளை பார்ட்டிகளுக்கு அணிந்து செல்லலாம். பாட்டம் பகுதி அல்லது மேல் பகுதி ஏதாவது ஒன்றின் மீது கவனம் செலுத்தி, இந்த பேட்டர்னை முயற்சி செய்யலாம்.

சிறு கட்டங்கள் கொண்ட ஆடைகளைத் தவிர்த்து, பெரிய கட்டங்கள் கொண்ட பேட்டர்ன்களில் கவனம் செலுத்துங்கள். பிளெய்ட் பேட்டர்ன் அதற்குச் சரியான சாய்ஸ். தற்போதைய ட்ரெண்டும் அதுதான். இந்த பேட்டர்னில் ஷர்ட் அணிந்தால், டாம் பாய் லுக் கிடைக்கும். ஷர்ட் ஃபிட்டாக இல்லாமல் லூஸாக அணியுங்கள்.

போல்கா டாட்ஸ் உங்களுக்கு ரைட் சாய்ஸ். அவை சிறு வட்டமாக இல்லாமல், பெரிய அளவில் இருக்க வேண்டும்.

ஆடையில் கவனம் தேவை

எந்த உடையாக இருந்தாலும் அது உடல்வாகுக்கு ஏற்றாற்போல் அணிய வேண்டும். அப்போதுதான் தோற்றத்தில் உள்ள குறைகளை மறைக்க முடியும். ப்ளஸ் சைஸ் பெண்கள் பியர் அல்லது ஆப்பிள் என இரு ஷேப்களில்தான் இருப்பார்கள். இவர்களைக் கர்வி ஷேப் என பொதுவாக சொல்வார்கள்.

ரஃபில் டாப்ஸ்

ரஃபில் டிசைன் 80களின் ட்ரெண்ட். தற்போது அந்த ஃபேஷன் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. இந்த வகை கட்ஸ் கொண்ட டாப்ஸ் பொருத்தமாக இருக்கும். இது உங்கள் தோற்றத்துக்கு ஸ்டேட்மென்டைத் தரும். கூடுதலாக உங்களுக்கு பெண்மைக்குரிய தோற்றத்தையும் அளிக்கும்.

ஃபுல் ஸ்லீவ் டாப்ஸ்

இந்த வருட சம்மருக்கான ப்ளஸ் சைஸ் அவுட்ஃபிட் ராம்ப் ஷோக்களில், ஃபுல் ஸ்லீவ் ஆடைகள்தான் அதிகமாகக் காணப்பட்டன. இந்த வகை டாப் உங்கள் உடல் பருமனைக் குறைத்துக் காட்டும். மற்றவர்களின் கவனமும் கை ஸ்லீவில்தான் இருக்கும். இதில் கோல்ட் ஷோல்டர், ஆஃப் ஷோல்டர், ரிஸ்ட் பெல் ஸ்லீவ் கொண்ட ஃபுல் ஸ்லீவ் கட்ஸும் அணிந்தால் ட்ரெண்டியாக இருக்கும். இதற்கு ஃப்ரீ ஸ்டைல் ஸ்கர்ட் சரியான மேட்ச்.

பலாஸ்ஸோ பேன்ட்

பலாஸ்ஸோ பேன்ட், கேஷுவல் மற்றும் ஃபார்மல் என இரு வகையான தோற்றத்துக்கும் பொருந்தும். அதேபோல் எல்லாவகையான டாப்களுக்கும் பொருத்தமாக இருக்கும். கோடைக்கு ஏற்ற சவுகர்யமான உடை. வெயிஸ்ட் பகுதியில் பெல் ஷேப் ஃப்ளேர் கட்ஸ் கொண்ட பலாஸ்ஸோ பேன்ட் அணிவது உங்கள் தோற்றத்துக்கு அட்டகாசமாக இருக்கும்.

அசிமெட்ரிகல் குர்தா

உங்கள் உடல்வாகுக்கு அசிமெட்ரிக்கல் குர்த்தா, பிளெசன்ட்டான தோற்றத்தைக் கொடுக்கும். குர்த்தாவில் சைட் கட்ஸ் இருப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக, ஃபிளேர்ட் கட்ஸ் குர்த்தா சரியான மேட்ச்சாக இருக்கும். இதற்கு லெகிங்ஸ் அல்லது ஜீன்ஸ் அணியுங்கள்.

ஃப்ளோரல் லாங் கவுன்ஸ்

ப்ளோரல் கவுனில் பெரிய அளவிலான பூக்கள் கொண்ட பேட்டர்னாக வாங்குங்கள். ப்ளஸ் சைஸ் பெண்களுக்கென்றே பிரின்ஸஸ் கட் கொண்ட கவுன்கள் இருக்கின்றன. முன்புறம் ப்ளீட்ஸ் இருக்கும். காட்டன் ஃபேப்ரிக்கிலும் கவுன்கள் கிடைக்கின்றன. ஃபார்மலாகவும் கிராண்டாகவும் விழாக்களுக்கும் ஏற்றவாறும் கிடைக்கின்றன. இவை உங்களை சவுகர்யமாக உணரச் செய்யும்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon