மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 9 டிச 2019

விக்ரம் பட வாய்ப்பை மறுத்த தெலுங்கு நடிகர்!

விக்ரம் பட வாய்ப்பை மறுத்த தெலுங்கு நடிகர்!

விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தெலுங்கு நடிகர் நிதின் மறுத்துள்ளார்.

கமலிடம் உதவியாளராக தனது திரைவாழ்க்கையைத் தொடங்கியவர் ராஜேஷ் எம். செல்வா. இவர் கமலை கதாநாயகனாகக் கொண்டு இயக்கிய தூங்காவனம் திரைப்படம் கவனம் பெற்றது. ஃப்ரெஞ்ச் திரில்லர் திரைப்படம் ஒன்றின் பாதிப்பில் உருவாகிய அந்தத் திரைப் படம் போலவே மற்றொரு கதையை எழுதி இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் நிதினிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விக்ரம் படத்தைத் தவிர்த்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார். அதில், “இரண்டாவது கதாநாயகனாக நடிக்கக் கேட்டனர். கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே நடிக்க முடியாமல் போனது” என்று கூறியுள்ளார்.

கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ், டிரைண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon