மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

இயற்கை எரிவாயு விலை உயர்வு!

இயற்கை எரிவாயு விலை உயர்வு!

இயற்கை எரிவாயு விலையை மத்திய அரசு 6 சதவிகிதம் வரையில் உயர்த்தியுள்ளது. இது கடந்த இரண்டாண்டுகளில் அதிகபட்ச விலை உயர்வாகும்.

இந்தியா தனது உள்நாட்டுத் தேவைக்கு உற்பத்தி போகப் பெருமளவு இயற்கை எரிவாயு வெளிநாடுகளிலிருந்தே உள்நாட்டு விலையைவிட இரு மடங்கு விலை கொடுத்து இறக்குமதி செய்கிறது. எனவே அமெரிக்கா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகளின் விலை நிலவரங்களைப் பொறுத்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா, உள்நாட்டில் இயற்கை எரிவாயு விலையை மாற்றியமைக்கிறது. அதன்படி இயற்கை எரிவாயுவின் விலை தற்போது 6 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இயற்கை எரிவாயு விலை மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு (எம்.எம்.பி.டி.யு) 3.06 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2017 அக்டோபரில் 2.89 டாலராக உயர்த்தப்பட்டிருந்தது.

அதிக உற்பத்தி கொண்ட சர்வதேச நாடுகளின் விலை நிலவரங்களைப் பொறுத்து உள்நாட்டில் இயற்கை எரிவாயு விலையை நிர்ணயிக்கும் நடைமுறையைப் பிரதமர் நரேந்திர மோடி 2014 அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தினார். அப்போது இயற்கை எரிவாயு விலை 5.05 டாலராக இருந்தது. அதன் பின்னர், 4.66 டாலர், 3.82 டாலர், 3.06 டாலர், 2.50 டாலர், 2.48 டாலர், 2.89 டாலர் என ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விலை மாற்றம் செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 6 சதவிகித விலை உயர்வால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஓ.என்.சி.சி உள்ளிட்ட பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.4,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் இயற்கை எரிவாயு விலை உயர்வால் அதைச் சார்ந்த உரம் தயாரிப்பு மற்றும் மின்சாரம் தயாரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon