மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 14 டிச 2019

ஸ்மிரிதி இரானி மீது அவதூறு வழக்கு: கபில் சிபல்

ஸ்மிரிதி இரானி மீது அவதூறு வழக்கு: கபில் சிபல்

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி நேற்று முன்தினம் (மார்ச் 29) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல்மற்றும் அவரது மனைவி ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டிருந்த நபரிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி நில மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த கபில் சிபல், நீரவ் மோடியுடன் பிரதமர் மோடி ஏன் நெருங்கிய உறவு வைத்திருந்தார் என்பது பற்றி அந்தப் பத்திரிகை சந்திப்பில் கேள்வி எழுப்பப்படவில்லை. லலித் மோடிக்கும் தங்களுக்கும் உள்ள உறவு குறித்து பாஜக தலைவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

நேற்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த கபில் சிபல், “பண மோசடி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர் என் மீது குற்றம்சாட்டுகிறார்.

நான் நன்றாகவே சம்பாதிக்கிறேன். எனது வருமானத்தின் மூலம் அந்த நிறுவனத்தை வாங்கினேன். கார்ப்பரேட் வரியை நான் செலுத்தியுள்ளேன். அந்த ஆவணங்களையெல்லாம் நீங்கள் பார்க்க விரும்பவில்லை. ஆனால், பண மோசடி என்று மட்டும் குற்றம்சாட்டுகிறீர்கள்” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவதூறு வழக்கு தொடரப்படுமா என்ற கேள்விக்கு, “ஆமாம்” என்று அவர் பதிலளித்தார்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon