மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

வேலூரில் ஐ படம் ரிலீஸாகாமல் போனது ஏன்?

வேலூரில் ஐ படம் ரிலீஸாகாமல் போனது ஏன்?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 32

இராமானுஜம்

தமிழ் சினிமா வியாபாரம் வெளியீட்டில் NSC ஏரியா மிக முக்கியமான பகுதி. ஒரு படம் ரிலீஸ் செய்யப்படும் முந்தைய நாள் (பிரிண்ட் முறை இருந்தபோது) அனைத்து விநியோகஸ்தர்களும் தாங்கள் பேசிய விலை அடிப்படையில் பணத்தைத் தயாரிப்பாளருக்கு கொடுத்தாக வேண்டும். அப்படத் தயாரிப்பாளர் பைனான்சியர், படத்தில் பணியாற்றியவர்களுக்கு பாக்கி வைத்திருந்தால் அதனைக் கொடுத்தால் மட்டுமே லேபிலிருந்து பிரிண்ட் டெலிவரி எடுக்க முடியும்.

விற்பனை குறைவாக இருந்து கொடுக்க வேண்டிய தொகை அதிகமாக இருந்தால் பஞ்சாயத்து நடக்கும். காலையில் புதிய படம் தியேட்டருக்குக் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில், நாணயமான விநியோகஸ்தர்கள் கூடுதலாக பணம் கொடுப்பார்கள். செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு பகுதி விநியோகஸ்தர்கள் லேபுக்கே வரமாட்டார்கள், ஆனால் அவர்களின் உளவாளிகள் அங்கு இருந்து தகவல் கொடுத்துக்கொன்டிருப்பார்கள். திருநெல்வேலி ஏரியாவுக்கு பெட்டி டெலிவரி கொடுத்தாச்சு என்றவுடன் NSC விநியோகஸ்தர்கள் லேபுக்கு வருவார்கள். தியேட்டர் பேமென்ட் தாமதம், பஸ் கிடைக்கல என சாக்குப்போக்குகள் கூறப்படும். சில நேரங்களில் ஒப்பந்தபடி பணத்தைக் கொடுப்பவர்களும் உண்டு, குறைத்துக் கொடுப்பவர்களும் உண்டு.

படம் ரிலீசுக்குப் பின் கணக்கு வாங்குவதற்கும், கூடுதலாக ஓடியிருந்தால் அதனைத் தயாரிப்பாளர் வாங்குவதற்கும் பெரும் போராட்டம் நடக்கும். நாணயமான விநியோகஸ்தர்களிடம் இந்த சிரமம் இருக்காது. இந்த இம்சையை வட ஆற்காடு பகுதியில் மாற்றியவர் சீனிவாசன் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

பேசிய விலைப்படி குறிப்பிட்ட நேரத்தில் தயாரிப்பாளருக்குப் பணம் போய்ச் சேரும். தியேட்டரில் அட்வான்ஸ் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் கிடையாது. படம் ஓடி முடிந்தவுடன் கணக்கும், கூடுதல் வசூல் ஆகி இருந்தால் அதற்குரிய காசோலையும் தயாரிப்பாளருக்கு உடனடியாகச் சென்றடையும். இந்த நடைமுறை தயாரிப்பாளர்களைக் கவர்ந்தது.

சீனு வேண்டாம் என்றால் மட்டுமே வேறு விநியோகஸ்தருக்குப் படம் கிடைக்கும், ஆனால் அப்படியொரு ஆரோக்கியமான வியாபாரம் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அது நடத்தப்பட்டு, அவுட் ரேட்டுக்கு படம் விற்க்க முடியாமல், அவரிடமே ‘நீங்கள் கேட்ட விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள்’ என சீனிவாசனிடமே வரும். எனக்கு அந்த ஐடியா இல்லை நீங்கள் தேடி வந்ததால் அதே விலைக்கு விநியோகம் செய்கிறேன் என்று வியாபாரத்தை முடிப்பார் சீனிவாசன்.

குஜராத் முதல்வர் மோடி, நியாயவாதி, காலம் தவறாமை என அம்மாநில மக்கள் நலனுக்குப் பணி புரிந்ததை முன்னிலைப்படுத்தி எப்படி இந்தியாவின் பிரதம மந்திரியாக வந்தாரோ, அதேமாதிரிதான் வட ஆற்காடு சினிமா சீனிவாசன் கட்டுப்பாட்டுக்குள் போனது. இப்போது சினிமா மோடியாக மாறிய சீனிவாசன் 2014இல் தான் ரிலீஸ் செய்த படங்களுக்குக் கழித்த வரி 15% என்கின்றனர் தயாரிப்பாளர்கள். தமிழகத்தில் வட ஆற்காடு பகுதியில் டிக்கெட் விலை குறைவு. விற்பது அதிகமாக இருக்கும். அந்த தொகைக்கு 15% வரி கழிக்கப்படும். பிற விநியோகப் பகுதிகளில் 5% தோராயமாகக் கழிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது என்கின்றனர் ஓய்வு பெற்ற வேலூர் விநியோகஸ்தர்கள்.

திரையரங்குகளை இவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும் - இரட்டை கணக்கு முறையும் - விக்ரம் நடித்த ‘ஐ’ படம் வேலூர் பகுதியில் ரிலீஸ் ஆகாமல் போனதும் எப்படி ... நாளை பகல் 1 மணிக்கு.

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

வெள்ளி 30 மா 2018