மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

இனி யாருமே விதிமீறலில் ஈடுபட மாட்டார்கள்!

இனி யாருமே விதிமீறலில் ஈடுபட மாட்டார்கள்!

சாலை விதிமீறல்களால் தினந்தோறும் எத்தனையோ விபத்துகள் நடக்கின்றன. ஒவ்வொருவரும் தங்களின் சுயநலத்துக்காக விதி மீறுகின்றனர். சிக்னல்களில் நிற்காமல் செல்வார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பொறுமையாகக் காத்திருக்க முடியாது. சில நேரங்களில் அவர்கள் நடைபாதையில் தங்கள் பைக்கைக் கொண்டுசெல்வார்கள், ஏனெனில், பாதசாரிகள் பக்கத்தில் ஒதுங்கிக்கொள்ளலாம். தங்களுடைய டீசல், பெட்ரோலைச் சேமிக்க வேண்டும் என்பதற்காகவும், ஒரு மீட்டர் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் இடது பக்கத்தில் செல்கின்றனர். சாலை விதிமுறைகளைப் புறக்கணிப்பது மட்டுமில்லாமல், வலது பக்கத்தில் வருபவர்களுக்கு ஆபத்துகளை விளைவிக்கின்றவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்நிலையில், புனேயில் விதிமுறையை மீறி இடது பக்கத்தில் வாகனத்தை ஓட்டிச் செல்பவர்களைத் தடுக்கும் வகையில் ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவின் சாலை விதிகளில் இடது பக்கம் செல்ல வேண்டும், குறிப்பிட்ட இடங்களில் மட்டும் யு-டர்ன் எடுக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் பெரும்பாலானவர்கள் இதைப் பின்பற்றுவதில்லை. இதைக் கட்டுப்படுத்த, அபராதம் விதிக்கப்பட்டும் சரி செய்ய முடியவில்லை. அதனால் தவறான பக்கத்தில் வாகனத்தை ஓட்டினால் வாகனத்தின் டயரை கிழிக்கக்கூடிய வேகத்தடையை புனே போலீஸ் அதிகாரிகள் அமைத்துள்ளனர். இந்த வேகத்தடைக்கு டயர் கில்லர் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த முறை தவறான பக்கத்தில் செல்பவர்களை நிறுத்துவதற்கான ஒரு தீவிர நடவடிக்கை. இது அவசியமான ஒன்றாகத் தெரிந்தாலும், தவறான பக்கத்தில் செல்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது.

டயர் கில்லர் வேகத்தடையில் சிக்குபவர்கள் மோசமான விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அவர்கள் வாகனத்தில் செல்லும் வேகத்தைப் பொறுத்து ஆபத்துகள் ஏற்படும்.

இந்த டயர் கில்லர்கள் உண்மையில் டயரைக் கிழிக்காது. தவறான பாதையில் செல்பவர்களின் டயரை பஞ்சர் ஆக்கிவிடும். இதனால் வாகன ஓட்டி நிலைதடுமாறி கீழே விழுந்துவிடுவார்.

இந்த முறை மிகவும் முட்டாள்தனமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. உண்மையில், இந்தியாவில் எத்தனை பேர் போக்குவரத்து அறிகுறிகள் மற்றும் விதிமுறைகளை உண்மையாக மதித்து நடக்கின்றனர் என்பதை வெளிக்காட்டக்கூடியது என புனே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இதன் மூலம் சாலை விதிமுறைகளை மீறுபவர்களின் எண்ணிக்கை குறையும் என அதிகாரிகள் நம்புகின்றனர். புனே நகர் சாலைகளில் இந்தத் திட்டம் அமைக்கப்படவுள்ளது. இந்த விதிமுறை வெளிநாடுகளில் மட்டுமே இருந்து வந்தது. டெல்லி நொய்டா சாலைகளிலும் இவ்வாறு அமைக்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon