மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

ரெண்டு மிக்சர் தட்டு பார்சல்ல்ல் - அப்டேட் குமாரு

ரெண்டு மிக்சர் தட்டு பார்சல்ல்ல் - அப்டேட் குமாரு

அதிமுக ஒரு பக்கம் உண்ணாவிரதம் அறிவிச்சிருக்கு, திமுக ஒரு பக்கம் கருப்புக்கொடி அசைக்கும் போராட்டம் அறிவிச்சிருக்கு, புரொடியூசர் கவுன்சில் பேரணி அறிவிச்சிருக்காங்க. இதெல்லாமே, ஏப்ரல் மாசம் முதல் வாரத்துக்குள்ள தமிழ்நாட்டுல நடக்கப்போற பிரச்சினைகள்னு லிஸ்ட் போட்டு சொன்னா, அதிமுக உண்ணாவிரதத்தை மட்டும் கலாய்க்கிறாங்க. ஏன்யா இப்டி பண்றீங்கன்னா, உண்ணாவிரதத்துக்கு அறிவிச்சிட்டு, இந்தப்பக்கம் ரெண்டு பேரை டெல்லிக்கு அனுப்ப தயாராகிட்டு இருக்குற இவங்களையா நம்புறன்னு மானம் போறா மாதிரி கேக்குறான் கர்நாடகா ஃப்ரெண்டு. இதை கூட மன்னிச்சிருவானாம். தமிழ்நாட்லயும் கர்நாடகாலயும் பா.ஜ.க. ஆட்சி இருந்திருந்தா காவிரி பிரச்சினை தீர்ந்திருக்கும்னு தமிழிசை சொன்னதைக் கேட்டு அரைமணி நேரம் ஃபோன் பேசிட்டே சிரிச்சிட்ருந்தான். ஏதோ ஜியோவா இருக்கவும் தப்பிச்சேன். ரெண்டு இடத்துலயும் பா.ஜ.க வரத்தேவையில்லை பாஸ், கர்நாடகால மட்டும் பா.ஜ.க ஜெயிச்சிட்டா போதும். தமிழ்நாட்டு பா.ஜ.க-வுக்கு ஹெவியா கவனிச்சிருவாங்கன்னு ஏதோ ஒரு தைரியத்துல சொல்லிட்டு வந்திருக்கேன். அதிமுக உண்ணாவிரதம் மட்டும் நடந்திருச்சுன்னா, நரி ஊளை விட்ட மேட்டர் சக்சஸ்னு சொல்ற மாதிரி காவிரி மேட்டர்ல ஒரு முடிவு தெரிஞ்சிரும். நான் போய் இந்த ஹர்பஜன் சிங் அட்மின் யாருன்னு கண்டுபுடிச்சிட்டு வர்றேன் வைட் பண்ணுங்க. ரொம்ப ஓவரா பண்ணிட்ருக்காய்ங்க பாஸ்.

கோழியின் கிறுக்கல்!!

பெற்றோரின் கரம் பிடித்து நடப்பவர்கள் பாக்கியவான்கள்!!

நம் இளமையிலும், அவர்கள் முதுமையிலும்!!

@sundartsp

சிவாஜி கமல் விக்ரம் வரிசையில் ரோலாவே மாறுறது ஹர்பஜன் சிங்க் தான் போல

புகழ்

எனக்கெல்லாம் அதிர்ச்சியேயில்லை..

நாட்டுப்பற்றுடன் வருடமிரண்டு நாட்களில் சட்டையை ஓட்டையாக்கிக் கொண்டவர்களுக்கு அதிர்ச்சி இருக்கலாம்..

காவிரி மேலாண்மை வாரியம்.

amudu

பேருந்தில் நமக்கு கால் வைக்க இடம் இருக்காது. ஆனால், கண்டக்டர் கண்களுக்கு மட்டும், பல ஏக்கர் இடம் உள்ளே காலியாக இருப்பதாக தெரியும்.

மெத்த வீட்டான்

அரசாங்கமே நீதிமன்ற உத்தரவை மதிக்கலன்னா அப்புறம் என்னத்துக்கு கோர்ட்?

SKP KARUNA

ஒரு மாநிலத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதித்தீர்ப்பில் இறுதி நிமிடம் வரை ஒரு முடிவும் எடுக்காமலும், அதற்குக் காரணமாகவோ, மக்களுக்கு ஆறுதலாகவோ, நம்பிக்கையாகவோ ஒரு வார்த்தையும் கூறாத பிரதமரை நாம் என்னவென்று அழைப்பது? லீடர் என்றா? துரோகி என்றா?

தமிழன்டா

மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லை - துரைமுருகன்

இங்கு எச்.ராஜாவுக்கு கூட இவர்களால் கண்டனம் தெரிவிக்க முடியாது என்பதுதான் உண்மை, அட்மினை வேண்டுமானால் கண்டிக்கலாம்

டான் DON டான்

‏கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் கிடைக்கும்- எச்.ராஜா

காவிரி பிரச்சனைய தீர்க்கவே மாட்டோம்னு எப்டி நாசூக்கா சொல்றாங்க

Prof Langdon

இந்திய எல்லையை காக்கும் இராணுவம் கூட மேற்கொள்ளாத மிக நுட்பமான செயல்பாடுகளை அதிமுகவை பாதுகாப்பதில் மீடியாக்கள் கடைபிடிக்கிறார்கள். தமிழகத்தின் வீழ்ச்சியில் மீடியாவின் பங்கென்பது அதிமுகவின் பங்கிற்கு இணையானது.

இடும்பாவனம் கார்த்தி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே.!

நீங்கள் உண்ணாவிரதம் இருக்கவும் வேண்டாம். போராடவும் வேண்டாம்.

மெரீனா கடற்கரைக்குப் போடப்பட்டிருக்கிறத் தடையை மட்டும் நீக்குங்கள். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

சி.பி.செந்தில்குமார்

சார்,பிரபஞ்ச அழகினு"ஒரு"போட்டோ"போட்டீங்க,பாவம் சாப்பாட்டுக்கே வழி இல்லாத மாதிரி பரிதாபமா இருக்கே?

அதான் சொன்னேனே? பிர"பஞ்ச" அழகி னு.அழகுலயும்"பஞ்சம் தான்

சில்லற இல்லபா

இங்க வந்து பொலம்புரது ஆருதல் சொல்ல நம்பர் கேட்டா ஓட்ரது என்ன ஓலகம் ச்சை

தமிழினி

கவனிக்கப்படாமல் இறந்தவர்களுக்கு செய்யும் "திதியும்"

இறந்த பின் அரசாங்கம் தரும் "நிதியும்" பயனற்றது..

SHIVA SWAMY.P

ஜாதியை அறிந்துகொண்டு அதற்க்கு ஏற்றால்போல நிலத்தை தேடி இறைகளை பொறுக்கி சாப்பிடுவதில்லை பறவைகள் ..!!

amudu

செய்தி: டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தடை.- உச்ச நீதிமன்றம்.

டோக்கன் சின்னம் இருக்கும் போது அவருக்கு என்ன பயம்.

அன்புடன் கதிர்

எடப்பாடி உருவில் சேகுவாராவை காண்கிறேன் - அமைச்சர் வேலுமணி

நாஞ்சில் சம்பத் வடிவில் உங்களை பார்க்கிறோம் - மக்கள்

மஹீஷா

வெட்டியாக இருப்பவர்களிடம்.. வேலை வாங்கும்முன்...

“சும்மா தான இருக்கீங்க.. “என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்..

உங்கள் வேலை இனிதே நிறைவுறும்!

Arunagiri

காவிரி நடுவர் மன்றம் அறிவித்த காவிரி மேலாண்மை வாரியம் என்ற சொல், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இல்லை என்பதை, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சொன்னது வைகோ மட்டுமே.காரணம்,அதற்கு முதல் நாள் முழுமையும், இரவு 2 மணி வரையும் தீர்ப்பை முழுமையாக வரிவிடாமல் வாசித்தார். கூட்டம் முடிந்தபிறகு, அமைச்சர்கள் தனியாகத் தலைவரிடம் பேசும்போதும் அதுகுறித்துத் தலைவர் விளக்கி விட்டு வந்தார்.ஸ்கீம் என்ற சொல்லை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திருட்டுத்தனமாக நுழைத்து இருக்கின்றார் என்று சொல்லி, அவரைக் கண்டித்து மேடைகள் தோறும் பேசி வருகின்றார். அதற்காக, என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தால் எதிர்கொள்வேன் என்றும் பல மேடைகளில் சொல்லி விட்டார். இத்தனை நாள்களாக அதுபற்றித் தமிழக அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இப்போது உச்சநீதிமன்றத்தில்அந்த ஸ்கீம் என்ற சொல்லுக்கு விளக்கம் கேட்கப் போகின்றார்களாம்..

-லாக் ஆஃப்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 30 மா 2018