மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

ஆட்சியாளர்கள் கற்றுக்கொடுத்த சினிமா அரசியல்!

ஆட்சியாளர்கள் கற்றுக்கொடுத்த சினிமா அரசியல்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 31

இராமானுஜம்

கடந்த தொடரை படித்து விட்டு சில விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பேசினார்கள்.

சினிமா ஸ்ட்ரைக், சிண்டிகேட் கலாச்சாரம், VPF கட்டணம் இதில் எப்படி அம்பானியும், மோடியும் வந்தார்கள் என்கிற கேள்வியை எழுப்பினார்கள்.

தமிழக அரசியலை 1967 முதல் சினிமாதான் தீர்மானித்துவருகிறது. ஆட்சி அதிகாரம், அரசு அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் ஜனநாயகத்தில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் ஆதிக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்துவருகிறது. தங்களை அதிகாரத்தில் அமர வைத்த சினிமாவைச் செழுமைப்படுத்தவும், ஜனநாயப்படுத்தவும் ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை. தங்கள் வசதிக்காக தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அதிகார மையத்தை உருவாக்கி அழகு பார்த்தார்கள். தங்கள் தொலைக்காட்சிக்கு விரும்பிய படங்களைத் தயாரிப்பாளர்கள் தேடி வந்து கொடுப்பதற்கு சினிமா அதிகார மையத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள். ஆட்சி மாறியபோது அதுவே தங்களுக்கு எதிராக மாறியதை அனுபவித்த கதையும் நடந்தது.

அதனுடைய பாதிப்புதான் ஜனநாயகவாதியாக இருந்த திருப்பூர் சுப்பிரமணியை கோவை ஏரியாவில் அதிகாரமிக்க, ஆதிக்க சக்தியாக மாற தியேட்டர் சிண்டிகேட்டை உருவாக்கத் தூண்டியது. ராஜமன்னாருடன் கூட்டணி வைத்து வளர்ந்துவந்த விநியோகஸ்தர்காஸ்மோ சிவாவை வளரவிடாமல் தடுத்து வெளியேற்றினார்கள்.

அரசியல் பின்புலம் இல்லாமலேயே அரசியல் அதிகாரத்தைப் பிடிக்க சினிமாக்காரர்கள் நினைப்பதுபோல, சீனிவாசன் சினிமா பின்புலம், அனுபவம் இன்றி சினிமாவுக்குள் விநியோகஸ்தராக நுழைந்தார். பிரமிட் சாய்மீராவின் வட ஆற்காடு மேனேஜர், தியேட்டர் குத்தகை எனப் பன்முகத் தன்மையுடன் பயணித்த இவர், வட ஆற்காடு பகுதியில் 10 திரையரங்குகளுக்கு உரிமையாளர். வட ஆற்காடு பகுதியில் விநியோக தொழில், திரையரங்கத் தொழில்களைப் பாரம்பரியமாகச் செய்துவந்தவர்கள் இன்றைக்கு சீனிவாசனிடம் வேலையாட்களாக, படப் பிரதிநிதிகளாக வேலை செய்கிறார்கள். இது சீனிவாசனின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியா, அவரது பண பலத்தால் பெற்ற வெற்றியா என்ற கேள்வி எழுகிறது.

இரண்டும் இல்லை. ஏற்கெனவே இருந்த விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் செய்த தவறுகளால் சீனிவாசன் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஆபத்பாந்தவனாக, அநாதரட்சகனாகத் தெரிந்தார். இந்திய மக்களுக்கு மோடி தெரிந்ததைப் போல. தன்னை நம்பிய சினிமாக்காரர்களிடம் சீனிவாசன் ஆடிவருவது ஒரு வகையான அரசியல் ஆட்டம். அதனால்தான் மோடிக்கு வரி விதிக்கக் கற்றுக் கொடுத்த சீனிவாசன் என முடித்திருந்தோம். இங்கு அரசியல் இன்றி எதுவும் இல்லை.

சினிமாவில் சீனிவாசன் அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி… சுட சுட மாலை 7 மணிப் பதிப்பில்…

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon