மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 20 பிப் 2020

டெண்டர் சர்ச்சை : வேளாண் வாரியத்துக்கு நோட்டீஸ்!

டெண்டர் சர்ச்சை : வேளாண்  வாரியத்துக்கு நோட்டீஸ்!

டெண்டர் படிவத்தை இணையதளத்தில் வெளியிடாததால் ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்யக் கோரித் தாக்கல் செய்த மனுவுக்கு 4 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு, காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 13 இடங்களில் தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியக் கிடங்குகள் கட்டுவதற்கான டெண்டர் கோரப்பட்டது. கடந்த 14ஆம் தேதி வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பாணையில் 28ஆம் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் முன்வைப்புத் தொகைக்கான வரவோலையுடன் வேளாண் விற்பனை வாரியத்தை அணுகிய திருவண்ணாமலையைச் சேர்ந்த கருணாநிதி என்பவரிடம் ஒப்பந்தப் புள்ளிப் படிவங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்யும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் இணையதளத்தில் ஒப்பந்தப் புள்ளி படிவங்கள் பதிவேற்றம் செய்யப்படாததால் டெண்டரை ரத்து செய்யக் கோரி கருணாநிதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று (மார்ச் 30) விசாரித்த நீதிபதி ரவிசந்திரபாபு, மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon