மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 15 நவ 2019

எம்பிக்கு எலி மருந்து பார்சல்!

எம்பிக்கு எலி மருந்து பார்சல்!

உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி, ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பளித்தது. ஆனால் அந்த கெடு முடிந்த நிலையிலும் மத்திய அரசு இன்னும் மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.

இதற்கிடையில் நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக எம்பி. நவநீதகிருஷ்ணன், ‘அரசியல் சாசனம் தோற்றுவிட்டது. இனி அதிமுக எம்பிக்கள் அனைவரும் தற்கொலைதான் செய்துகொள்ள வேண்டும்’ என்று பொங்கி வெடித்தார்.

இந்நிலையில் இன்று பொள்ளாச்சி அதிமுக எம்பி மகேந்திரனின் டெல்லி முகவரிக்கு அவரது தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக் கடவு பகுதியைச் சேர்ந்த பெரியார் மணி என்பவர், எலி மருந்தினை பார்சலில் அனுப்பி வைத்திருக்கிறார்.

நவநீத கிருஷ்ணன் பேச்சின் எதிரொலியாகத்தான் இந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon