மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 15 டிச 2019

அதிகரிக்கும் கரும்பு நிலுவைத் தொகை!

அதிகரிக்கும் கரும்பு நிலுவைத் தொகை!

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை ரூ.13,899 கோடியாக உயர்ந்துள்ளது.

விவசாயிகளிடமிருந்து ஆலைகள் கொள்முதல் செய்யும் கரும்புக்கான விலையை,கொள்முதல் செய்த அடுத்த 14 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் போது விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அவ்வாறாக மார்ச் 21ஆம் தேதி வரையில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை ரூ.13,899 கோடியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சர்க்கரை ஆலைகள் மொத்தம் ரூ.5,136 கோடி நிலுவைத் தொகையை வழங்காமல் உள்ளன. அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் ரூ.2,539 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ.2.48 கோடியும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதுகுறித்து மார்ச் 27ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உணவுத் துறை இணையமைச்சரான சி.ஆர்.சவுதரி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், ‘2017-18 பயிர் பருவத்துக்கான ரூ.55,553 கோடி நிலுவைத் தொகையில், ரூ.41,654 கோடியை மட்டுமே கரும்பு ஆலைகள் வழங்கியுள்ளன. மீதம் ரூ.13,899 கோடி வழங்கப்படவில்லை. சர்க்கரை விலையைப் பொறுத்தவரையில், உள்ளூரில் சர்க்கரை விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு சர்க்கரைக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு 100 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. அதேபோல, ஏற்றுமதி வரியையும் அரசு ரத்து செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon