மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 மா 2018

கூட்டுறவு சங்கத் தேர்தல்: தடை கேட்டு வழக்கு!

கூட்டுறவு சங்கத் தேர்தல்: தடை கேட்டு வழக்கு!

கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களுக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஐந்து அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 18,775 கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் 4 ஆண்டுகளுக்குப் பின் தற்போது நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 12 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தேர்தலில் ஆளுங்கட்சி தரப்பில் முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு கட்சிகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. ஒரு சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. தேர்தலில் வரும் 2ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மாசிலாமணி,வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், "கூட்டுறவு சங்கத் தேர்தலுக்காக கடந்த 26 ஆம் தேதி முதல் முதற்கட்ட வேட்புமனுக்கள் பெறப்பட்டன. ஆனால் இதில் முறைகேடுகள் நடந்துள்ளது. திமுகவினரின் வேட்பு மனுக்கள் பெறப்படுவதில்லை, அப்படியே பெறப்பட்டாலும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுவதில்லை. ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டாலும் தகுதி வாய்ந்த வேட்பாளர் பட்டியலில் திமுகவினர் பெயர்கள் இடம்பெறுவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் விதிகளுக்கு முரணாக நடைபெறவுள்ள கூட்டுறவு சங்க தேர்தல்களுக்குத் தடை விதிக்கவேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த வழக்கு வரும் 2ஆம் தேதி நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வியாழன் 29 மா 2018