மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

தேசிய விருது: போட்டியில்லாத பார்வதி

தேசிய விருது: போட்டியில்லாத பார்வதி

2017ஆம் ஆண்டு வெளியாகி மலையாளத் திரையுலகம் மட்டுமில்லாமல் தென்னிந்தியத் திரையுலகம் முழுவதுமே பாராட்டு பெற்ற திரைப்படம் டேக் ஆஃப் (Take Off). இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பார்வதி, போட்டியில் முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வருடந்தோறும் வழங்கப்படும் மத்திய அரசின் தேசிய விருதுகள் அறிவிப்புக்குச் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், ஒவ்வொரு திரையுலகத்திலிருந்தும் பலவித எதிர்பார்ப்புகளுடன் நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர். டேக் ஆஃப் திரைப்படத்தைப் பொறுத்தவரையில் பார்வதியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட ஒன்று. ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண், தனி ஒருத்தியாய் மகனை வளர்க்கும் தாய், விவாகரத்துக்குப் பிறகு இன்னொரு திருமண உறவில் இணையும் மனைவி, வேற்று நாட்டில் உயிருக்குப் போராடும் இந்தியக் குடிமகள் எனப் பலவிதமான கேரக்டர்களை அசத்தலாக நடித்துக் கொடுத்திருப்பார் பார்வதி.

இது தவிர, டேக் ஆஃப் திரைப்படம் தனியாகவே தேசிய விருதுக்குத் தகுதியானது. எனவே, எப்படியும் பல விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் டேக் ஆஃப் படத்திற்கு, முதல் விருதாக பார்வதிக்குக் கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon