மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 6 டிச 2019

அமெரிக்கா செல்லும் இந்திய மாம்பழங்கள்!

அமெரிக்கா செல்லும் இந்திய மாம்பழங்கள்!

நடப்பு சீசனில் 40 சதவிகிதம் கூடுதலான மாம்பழங்களை இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏப்ரல் மாத மத்தியில் மாம்பழ ஏற்றுமதி தொடங்கும் நிலையில் ஏற்றுமதிக்கு முன்பாக மாம்பழங்கள் கதிரியக்கச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். நாசிக் மாவட்டத்தின் லாசல்கான் கதிரியக்க மையம், மகாராஷ்டிர மாநில வேளாண் சந்தைக் குழுவின் வசி கதிரியக்க மையம் மற்றும் பெங்களூரு கதிரியக்க மையம் ஆகிய மூன்று மையங்களில்தான் இந்த மாம்பழங்களுக்கான கதிரியக்கச் சோதனைகள் நடைபெறும். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதியாகும் மாம்பழங்களில் சுமார் 90 சதவிகிதம் அளவு லாசல்கான் கதிரியக்க மையத்தில்தான் பரிசோதனை செய்யப்படுகின்றன.

சென்ற ஆண்டில் லாசல்கான் கதிரியக்க மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 1,165 டன் அளவிலான மாம்பழங்களை இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. இந்த ஆண்டில் 40 சதவிகிதம் கூடுதலான மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனில் மொத்தம் 1,500 டன் அளவிலான மாம்பழங்கள் ஏற்றுமதியாகும் வாய்ப்புள்ளது. அமெரிக்காவிலிருந்து தரச் சோதனை அதிகாரி ஒருவர் ஏப்ரல் மாத மத்தியில் இந்தியா வந்து மாம்பழங்களைப் பரிசோதனை செய்வார் என்றும், அதன் பின்னர் இரண்டு மூன்று நாட்களில் இங்கிருந்து அமெரிக்காவுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதியாகத் தொடங்கும் என்றும் லாசல்கான் கதிரியக்க மையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon