மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

அதுக்கெல்லாம் ஒரு இது வேணுமாமே -அப்டேட் குமாரு

அதுக்கெல்லாம் ஒரு இது வேணுமாமே -அப்டேட் குமாரு

நம்ம எம்.பி நேத்து பார்லிமெண்ட்ல பேசுனதைப் பாத்துட்டு ‘சிங்கம் களமிறங்கிருச்சே’ன்னு கத்துணவங்க அம்புட்டு பேரும், நீதிமன்றம் கொடுத்த கெடு முடிஞ்ச பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால தலைல முக்காடு போட்டு சுத்திட்டு இருக்காங்க. ஆனா, இந்த எம்.பி-க்கள் எல்லாரும் அசால்ட்டா பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்காங்க. இது என்னயா கைப்பிள்ளைக்கு வந்த சோதனையா இருக்கேன்னு, ஆட்சியை விமர்சிக்க கையத் தூக்கிட்டு வந்த கமல் எங்கன்னு பாத்தா சண்டே தூத்துக்குடி போய் ஸ்டெர்லைட் போராட்டம் பண்ணப்போறேன்னு சொல்லியிருக்கார். போராட்டம்னா நாள் குறிச்சு பந்தோபஸ்து ரெடி பண்ணி போறதா பாஸ். அங்க இருக்குறது மக்கள் கூட்டம். உங்க கட்சி அறிவிப்பு கூட்டத்துல பவுன்சர்ஸ் வெச்சு ஒழுங்குபடுத்துனா மாதிரி எதும் பண்ணிறாதீங்க. அப்பறம் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்மித்தை அழ விட்டா மாதிரி ஆக்கிருவாங்க. என்ன ஒரு விஷயம் அங்க ஒரு பாலுக்கு 4 விக்கெட் விழுந்துருக்கு. இங்க மேட்ச் ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடியே ஆல்-அவுட் பண்ணிருவாங்க. மத்தபடி வாழ்த்துகள் உலகநாயகனே. ஓ இப்ப நம்மவர்னு கூப்பிடணும்னு ஸ்டிரிக்டா சொல்லிருக்காங்களோ. கூப்பிடாம இருந்துதான் பாப்போம், என்ன பண்றாங்கன்னு.

@manipmp

அம்மா அப்பாவுக்கு ரொம்ப மரியாதை கொடுத்து பேசினால் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்துள்ளனர் என்று அர்த்தம்

குழந்தைகள் பார்வையில்

@tparavai

சிஎஸ்கே மேட்ச்சுக்கு டிக்கெட் வேணும்னா கேட்டு வாங்கு...அதுக்கேன் பெண்ணியம்,சுயமரியாதைன்னு வீடியோ போடுற... #பேப்பர் ரோஸ்ட் மொமண்ட்

@manipmp

நகரத்தில் தான் நடுநிலைமை எல்லாம்..

கிராமத்தில் இன்னும் ரெண்டுங்கெட்டான் தான்

@manithan_yes

குழந்தை வளர்ப்பு என்பது சாதாரணக் கலையல்ல; கலைத்ததை ஒன்று சேர்க்கும் கலை.

@latha_Bharathy

யாரோ என்றான பின் வழங்கும் ஆசிகளை பற்றியோ சாபத்தை பற்றியோ கவலை ஏன்....

@manipmp

கும்பலே

கோமாளி

வேடமிட்டு

நடந்தால்

கோமாளிக்கு

யார்

சிரிப்பார்?

- புதுமைப்பித்தன்

@CreativeTwitz

நான் பெருங்கோபத்துடன் அரசியலுக்கு வந்துள்ளேன் - கமல்

// சம்பள பாக்கி வச்சத்துக்கு நியாயமா கவுதமிக்கு தான பெருங்கோபம் வரணும்

@Thaadikkaran

பயங்கரவாதிகளின் புகலிடமாக கோவை மாறி வருகிறது - தமிழிசை

ஆமாங்க, பயபுள்ளைங்க அண்டாவோட பிரியாணியே தூக்கிட்டு போய்ட்டானுவே..!!

@Kozhiyaar

நேற்றைய தோல்வியில் புதைந்திருந்தால் நாளைய வெற்றி முளைக்காமலேயே போய்விடும்!!!

@HAJAMYDEENNKS

இந்த சினிமாக்காரங்க எப்படா செலிபிரிட்டி யாராச்சும் சாவாங்கன்னு காத்துக்கிட்டு இருப்பாங்க போல..உடனே அவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறேன்னு கிளம்பிடுறாங்க...!

@Akku_Twitz

ரஜினி கட்சியின் பெயரை அறிவித்த பிறகு மற்ற அரசியல்வாதிகளுக்கு தலை சுற்றும் - ராகவா லாரன்ஸ் #

நீ எல்லா பாட்டுலயும் ஒரேமாதிரி கால சுத்துறத நிறுத்துயா மொத

Giridaran Giri

நான்; டாய் என்ன பண்ணிட்டு இருக்க?

நண்பன்; நாகினி நாடகம் பார்த்துட்டு இருக்கேன்,

நான்; என்னாது பகல்ல நாடகமா?

நண்பன் : ஆமா ரிபீட்.

நான் ; கொய்யால, இஸ்ரோ ராக்கெட் விட்டு இருக்கு அதபார்க்குறத விட்டுட்டு நாடகத்த பார்த்துட்டு இருக்க....

நண்பன்; எனகிட்ட சொல்லவே இல்லயே,

ஆமா, அத பார்த்து எனக்கு என்ன கிடைக்க போகுது,

நான்; நீ, அடுத்த நாடகத்தை சேர்த்து பாரு....!

Jo Dave

ப்ளடி #CBSE ஜி...

ஏன் ப்ரூ?

ஒரு பத்தாங்கிளாஸ் எக்ஸாமை ஒழுங்கா நடத்த துப்பில்லை இந்த திராவிட அடிமைங்க எப்படி தமிழ்நாட்டை ஒழுங்கா ஆட்சி செய்வானுக?!! 😡

நீட் எக்ஸாமை பற்றி என்ன நினைக்கிறீங்க “ஜீ”?

செம ஸ்ட்ரிக்ட் பாஸு... பக்கா ப்ளானிங்கோட நடத்துற திறமை இருக்கு ஜீ...

ஒண்ணு தெரியுமா? இந்த பத்தாங்கிளாஸ் எக்ஸாமை கூட ஒழுங்கா நடத்த வக்கில்லாத இதே CBSE தான் இந்தியா முழுக்க NEET தேர்வை நடத்த போகுதாம்... இதுக்கு என்ன சொல்லுற...

ஜீ... அதுல நாங்க அறுத்து தள்ளிடுவோம்ல...

எடு அந்த தொடப்ப கட்டையை...

-லாக் ஆஃப்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon