மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 12 டிச 2019

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தின் இறுதி நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டேவருகிறது. இந்தத் தாக்கம் ஏப்ரல், மே மாதங்களில் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டால், மதிய வேளையில் வெளியே வர முடியாது.

இந்நிலையில், வெப்பத்தைக் குறைக்கும் வகையில் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை, குமரி கடற்பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், வெப்ப சலனம் காரணமாகவும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ, அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிக பட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று (மார்ச் 28) 8.30 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம், தென்காசி, சங்கரன்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் 10 மி.மீ மழை பெய்துள்ளது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon