மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

ஜெட் ஏர்வேஸ்: ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் தாமதம்!

ஜெட் ஏர்வேஸ்: ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் தாமதம்!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவனம், எங்களது கட்டுப்பாட்டை மீறிய சில சூழ்நிலைகளால் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்க வேண்டிய ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குக் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, விமானிகள், விமான ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோருக்கு ஏப்ரல் 10ஆம் தேதியும், மற்ற பணியாளர்களுக்கு ஏப்ரல் 3ஆம் தேதியும் சம்பளம் வழங்கப்படும்.

இதற்கான காரணம் குறித்து நிறுவனத்திடம் கேட்கப்பட்டது. நிறுவனத்தின் உள்விவகாரங்கள் பற்றி தகவல் தெரிவிக்க இயலாது என ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon