மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

வங்கிகளுக்கு மறுமூலதனம் அறிவிப்பு!

வங்கிகளுக்கு மறுமூலதனம் அறிவிப்பு!

இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் மத்திய அரசு ரூ.9,502 கோடி மறுமூலதனம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

வாராக் கடன் பிரச்சினைகளாலும் நிதி மோசடிப் பிரச்சினைகளாலும் சிக்கித் தவிக்கும் இந்திய வங்கிகளை மீட்டெடுக்க மத்திய அரசும் மத்திய ரிசர்வ் வங்கியும் போராடி வருகின்றன. வங்கித் துறை மேம்பாட்டுக்காகச் சென்ற ஆண்டின் அக்டோபர் மாதத்தில் மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.2.11 லட்சம் கோடி மூலதனம் அறிவித்திருந்தார். இவ்வங்கிகளுக்கு பட்ஜெட் அறிக்கையில் ரூ.8,139 கோடி மூலதனமும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வங்கிகள் இதுவரையில் பங்குச் சந்தைகளிலிருந்து ரூ.10,000 கோடிக்கும் மேல் நிதியுதவி பெற்றுள்ளன.

இந்நிலையில், மார்ச் 27ஆம் தேதி மத்திய அரசு இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் ரூ.9,502 கோடி மூலதனம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.4,132 கோடியும், பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு ரூ.5,370 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உடனடி நடவடிக்கைத் திட்டத்தின் கீழ், ஐடிபிஐ வங்கிக்கும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கும் முறையே ரூ.10,610 கோடி, ரூ.9,232 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. உடனடி நடவடிக்கைத் திட்டம் அல்லாமல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு ரூ.8,800 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.5,473 கோடியும் வளர்ச்சி மேம்பாட்டு நிதியாக அரசு வழங்கவுள்ளது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon