மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

சிபிஎஸ்இ மறுதேர்வு தேதி அறிவிப்பு!

சிபிஎஸ்இ மறுதேர்வு தேதி அறிவிப்பு!

சிபிஎஸ்இ மறுதேர்வு தேதிகள் இன்று (மார்ச் 29) அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான தேர்வு நேற்று நடைபெற்றது. ஆனால், தேர்வுக்கான வினாத்தாள் நேற்று முன் தினம் (மார்ச் 27) வாட்ஸ் அப்பில் வெளியானது. அதே போல், கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற ப்ளஸ் 2 பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ் அப்பில் வெளியானதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொருளாதாரவியல் பாடத்திற்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்திற்கும் மறுதேர்வு நடத்தப்படும். இந்த மறுதேர்வுகளுக்கான தேதிகள் ஒரு வாரத்திற்குள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ நேற்று(மார்ச் 28) அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், மறுதேர்வு தேதிகளை சிபிஎஸ்இ வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 24ஆம் தேதி ப்ளஸ் 2 வகுப்பு பொருளியல் தேர்வு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 26ஆம் தேதி பத்தாம் வகுப்பு கணித தேர்வு நடைபெறவுள்ளது.

அதேபோல், சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானதற்கும், மறுதேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுதேர்வு நடத்துவதென்றால் அனைத்து பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon