மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

இண்டிகோ விமானம் டயர் வெடித்து விபத்து!

இண்டிகோ விமானம் டயர் வெடித்து விபத்து!

ஹைதராபாத் விமான நிலையத்தில் நேற்று இரவு இண்டிகோ விமானத்தின் டயர் வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

திருப்பதியில் இருந்து ஹைதராபாத் நோக்கி 77 பேர் கொண்ட இண்டிகோ 6இ 7117 ரக விமானம் ஒன்று நேற்று இரவு 8.55 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரவு 10.25 மணியளவில் விமானம் தரையிறங்கியபொழுது அதன் டயர் திடீரென வெடித்தது.

இதனையடுத்து விமான நிலையத்தில் உள்ள தீயணைப்புப் படைக்கு உடனடியாகத் தகவல் அளிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பைலட்டுகள் பயணிகளைப் பதற்றமடையாமல் அமைதியுடன் இருக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தின் காரணமாக ஹைதராபாத் விமான நிலையத்தின் ஓடுதளம் சிறிது நேரம் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 விமானங்கள் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம், "திருப்பதியிலிருந்து புறப்பட்ட 6இ 7117 ரக விமானம், ஹைதராபாத் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது டயர் வெடித்தது. விமானத்தில் பயணம் செய்த 1 குழந்தை, 4 ஊழியர்கள் உட்பட 77 பேரும் பத்திரமாக உள்ளனர்" எனத் தெரிவித்தது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon