மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

கோலிக்கு மற்றொரு அங்கீகாரம்!

கோலிக்கு மற்றொரு அங்கீகாரம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மெழுகுச் சிலை அமைக்கப்படவுள்ளது.

விளையாட்டு, கலைத் துறை, அரசியல், பொதுச் சேவை போன்றவற்றில் ஈடுபட்டுவரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆள் உயர சிலைகள் டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுவருகின்றன.

சமீபத்தில் பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜுக்கு மெழுகுச் சிலை அமைக்கவுள்ளதாக மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் அறிவித்தது. மெழுகுச் சிலை அமைக்கப்படும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையையும் அதன் மூலம் சத்யராஜ் பெற்றார். மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின், கபில் தேவ், கால்பந்து வீரர் ரொனால்டோ ஆகியோரின் மெழுகுச் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் மெழுகுச் சிலை வைக்கப்பட உள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்றுவருகிறது. அவர் ஐபிஎல் தொடரில் 2013ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடிவருகிறார். அவரின் வெற்றிகளைப் பாராட்டும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சிலை அமைப்பதற்காக விராட் கோலியின் உடல் அளவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய விராட் கோலி, ”மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்க உள்ளது எனக்கு கிடைக்கும் மிகப் பெரிய கௌரவம். இத்தகைய வாழ்நாள் நினைவுச் சின்னம் வழங்கிய மேடம் துசாட்ஸ் குழுவிற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon